பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/650

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6i 6 நினைவுக் குமிழிகள்-3 1968-பிப்பிரவரி 8,9,10 நாட்களில் திருவேங்கடவன் பல்கலைக் கழக வடமொழித்துறை அருமறைகள்' பற்றி ஒரு கருத்தரங்கை நடத்தினர். அதில் என்னைக் கலந்து கொள்ளுமாறு கேட்டிருந்தனர். நான் இதற்கு ஒப்புக் @3rraing, “The Vedic Influence in the Ancient Tamil Literature' என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதிச் சமர்ப்பித் தேன். இத்தகைய கட்டுரைகள் யாவும் Collected Papers' என்ற தலைப்பில் நூல் வடிவம் பெறவேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். 1964 திசம்பரில் நடைபெற்ற அனைத்திந்திய கீழ்த்திசை மாநாட்டின் 22வது அமர்வு கெளகாதியில் (ஆஸ்ஸாம் மாநிலம்) நடைபெற்றது. பல்கலைக் கழகம் என்னைப் பேராளராகக் கலந்து கொள்ளும் வாய்ப்பு அளித்தது. ஆனால் நான் பிஎச். டி எழுத்து முறைத் தேர்வு சனவரியில் (1965) நடைபெற இருந்ததால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லையென்றாலும், “High-Lights of Cultural Influence Abroad in the Classical Period’’ argir p gửaļš su: Geogrsoui அனுப்பினேன். இந்த ஆண்டு திராவிட மொழிப்பகுதிக்குப் பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் (பேராசிரியர், மொழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம்) தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றிருந்தார். என் கட்டுரையை யாரையாவது கொண்டு கூட்டத்தில் படிக்கச் செய்யுமாறு கேட்டு எழுதினேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கல்விப் புலத்துறை யின் விரிவுப்பணித்துறையின் ஆதரவில் தமிழ் பயிற்றும் முறை பற்றி ஒரு கருத்தரங்கு 1964 சனவரி 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் தஞ்சையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளவும் தகுவழி காணும் திறமுடையவ ராக (Resource Person) இருக்கவும் கேட்டிருந்தனர். இதில்