பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/651

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் கலந்துகொண்ட இலக்கிய மாநாடுகள்... 617 கலந்து கொண்டேன். இதனால் என்னிடம் பி. டி. பயின்ற பல தமிழாசிரியர்களுடன் வேறுபல தமிழாசிரியர்களுடனும் பழகவும் கலந்து மகிழவும் வாய்ப்பாக அமைந்தது. 'இராஜாதங்கும் விடுதியில் (Rajas Chouitry) தங்கியிருந் தேன். இன்று புதுப்பிக்கப் பெற்று இருக்கும் நிலையில் அன்றில்லை; அன்றிருந்த நிலை சத்திரம்' என்ற பெயருக்கேற்ப இருந்தது. கவிதை கற்பித்தல், உரை நடை பயிற்றலும் மொழிப் பயிற்சிகளும், இலக்கணம் கற்பித்தலும் கட்டுரைப் பயிற்சிகளும் என்ற பொருள்கள் பற்றி நான் பேசிய பேச்சுகளும் கருத்தரங்கின் வேறு நிகழ்ச்சிகளும் பின்னர் நூல் வடிவம் பெறச் செய்து ஆசிரியர்கள் கைக்குக் கிட்டச் செய்தார் இணைப்பாளர் திரு எம். துரைசாமி. இந்த நூல் ஆசிரியர்கட்குப் பயன் படும் கையேடாக அமைந்தது. 1965-ஜூன் 2-4-ஆம் நாட்கள் சென்னை மாநிலக் கல்வி மாநாடு காரைக் குடியில் நடை பெற்றது. டாக்டர் w. R. R. W. ராவ் திறந்து வைத்தார்: பேராசிரியர் M. இரத்தினசாமி மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். நான் விடு முறையில் காரைக்குடியில் தங்கியிருந்தபோது பல்கலைக்கழகப் பிரிவில் ஒர் ஆய்வுக் கட்டுரை வழங்கு மாறு கேட்டனர் மாநாட்டு அமைப்பாளர்கள். மாநாடு, நான் பணியாற்றிய டாக்டர் அழகப்பச்செட்டியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடை பெற்றது. நான் ‘Standards of University Education stair p ஆய்வுக் கட்டுரை யைச் சமர்ப்பித்திருந்தேன். பேராசிரியர் அ சீனிவாச ராகவன் (முதல்வர். வ. வு. சி. கலைக்கல்லூரி, தூத்துக்குடி) தலைமையில் இந்தக் கட்டுரையைப் படித் தேன் பேராசிரியர் இராகவன் என் நெடு நாளைய நண்பர்' துறையூரில் நான் பணியாற்றியபோது-1947என்று நினைக் கின்றேன்-நாமக்கல் உயர் நிலைப் பள்ளியில் நடை 1. இப்போது அவர் இல்லை; பல ஆண்டுகட்கு முன்னரே அவர் திருநாடு அலங்கரித்து விட்டார்).