பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/652

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

吞五& நினைவுக் குமிழிகள்.சி பெற்ற ஒரு விழாவில் தலைமை வகித்துப் பேசினார். அப்போது என் நண்பர் திரு P. R. சுப்பிரமணியம் (தலைமையாசிரியர், கழக உயர் நிலைப்பள்ளி, நாமக்கல்) அழைப்பின் பேரில் அந்த விழாவிற்குப் போயிருந்தேன். அப்போது என் நண்பர் மூலம் பேராசிரியர் இராகவன் எனக்கு அறிமுகம் ஆனார். நான் காரைக்குடியில் பணி யாற்றிய போது பேராசிரியருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது. மாநாடு நடை பெற்றது கடுமையான கோடையில். கல்லூரிக்கு வந்த பிறகு வெப்பம் தாங்க முடியாமல் நூலக அறையில் படுத்துக் கொண்டு விட்டேன். மாலை 3-மணிக்கு நடை பெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது மிகவும் சோர்வுற்றிருந்தேன். மிகச் சிரமத்துடன் கட்டுரையைப் படிக்கும்போது என் தளர்வு நிலை தெரிந்தது. பேராசிரியர் இராகவனும் என் நண்பர் பேராசிரியர் திருவேங்கடாச்சாரியும் என் கட்டுரையை நன்கு விளக்கிப் பேசினார்கள். 1966-அக்டோபர் 27, 28, 29 நாட்களில் அவி காரில் நடை பெற்ற கீழ்த்திசை மாநாட்டிலும் (23-வது அமர்வு) நான் கலந்து கொள்ள முடியவில்லை. என்னு டைய பிஎச். டி. ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் இதில் கலந்து கொள்ள விரும்பவில்லை; ஆய்வுக் கட்டுரை யும் அனுப்பவில்லை 1968-சனவரி 3-10 இல் சென்னையில் நடை பெற்ற இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்டேன். இந்தக் கருத்தரங்கிற்கு Nature Poetry in the Azhvars' stoo so guigjä &LG)sost sou அனுப்பி வைத்தேன்-10 பக்கங்களில். கட்டுரையையும் மாநாட்டு விதிப்படி ஒரு குறிப்பிட எழுத்தில் அடிக்க வேண்டி யிருந்தது; அப்படியே அடித்து அனுப்பினேன். அதை எட்டுப் பக்கங்களில் சுருக்கி எழுதி அனுப்புமாறு கட்டுரை