பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/653

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் கலந்துகொண்ட இலக்கிய மாநாடுகள்... 份及莎 صحیحجمعیسی بیبیسی திரும்பி வந்தது. அப்போது தான் என் பிஎச்.டி. ஆய்வுக் கட்டுரை தட்டச்சு செய்யப்பட்டு வந்தது. மாற்றி எழுத நேரம் இல்லாததால் கட்டுரை தரும் பொறுப்பை விலக்கிக் கொண்டேன். அரசே முன்னின்று நடத்தியதால், வசதிகட்குக் குறைவில்லை. விருந்து போதும் போதும்’ என்றாய் விட்டது. இதை என்னால் சுவைக்க முடிய வில்லை. ஒரு நாள் அருண் ஒட்டலில் தங்கினேன். இலங்கையிலிருந்து வந்தவர்களும் அங்குத்தான் தங்கினர். திடீரென்று வந்த மறு நாளே சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு மாற்றிக் கொண்டனர். என்னால் தனிமையாக இருக்க முடியாததால் நானும் அந்த விடுதிக்கு மாற்றிக் கொண்டேன். பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் இந்த மாநாடு நடை பெற்றதால் மாநாட்டிற்கு "நல்ல களை தென்பட்டது. காலை சிற்றுண்டி நண் பகல் விருந்து சட்ட மன்ற உறுப்பினர் விடுதியில் நடை பெற்றன. மாலை சிற்றுண்டி, இரவு விருந்து வெவ்வேறு இடங்களில் நடை பெற்றன. காலை சிற்றுண்டி மட்டிலும் மாநாட்டு அமைப்பாளர் செலவில் நடை பெற்றது. ஏனையவை யாவும் தனிப்பட்ட வணிக மன்னர்கள், பட முதலாளிகள் இவர்களால் ஏற்றுக் கொள்ளப் பெற்றன. எம். ஜி. ஆர். ஏ. வி. எம். , தினமணி-எக்ஸ்பிரஸ் நிறுவனம், கல்கி நிறுவனம், V. பெருமாள் செட்டி அண்டுசன்ஸ், மருதைப்பிள்ளை ராஜா சர். முத்தையாசெட்டியார் இவர்கள் பெருஞ் சோற்று உதியன் சேரலாதன் கண்ட வழியைப் பின் பற்றி விருந்தளித்தனர். சேரலாதன் பாரதப் போரில் பங்கு பெற்றவர்கட்கு விருந்தளித்ததுபோல் இவர்கள் யாவரும் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் கருத்தரங்கில் பங்கு கொண்ட அறிஞர்கட்கு விருந்தளித்தனர். மாநாட்டின் நினைவாகச் சென்னை, அண்ணாமலை, மதுரைப் பல்கலைக் கழகங்களில் திருக்குறள் ஆராய்ச்சி நிரந்தர மாக நடை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப் பெற்றன ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் மூன்று இலட்சம்