பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/654

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

弥罗伊 நினைவுக் குமிழிகள்-4 வீதம் அரசு அளித்தது பாராட்டத் தக்கது. அண்ணாவின் நீள்நோக்கு இன்றும் நமது மனத்தில் பசுமையாகவே உள்ளது. அனைத்திந்திய கீழ்த்திசை மாநாட்டுக் கருத்தரங்கு24-வது அமர்வு அக்டோபர் 12, 3, 4 நாட்களில் (1968) வாரணாசியில் நடைபெற்றது. முதலில் என் சொந்தச் செலவில் போகலாம் என்று பல்கலைக் கழகம் எழுதியது. பின்னர் துணைவேந்தர் டாக்டர் W.C. வாமனராவிடம் நேரில் பேசிய பிறகு பல்கலைக் கழகமே பேராளராக அனுப்பியது. இக்கருத்தரங்கு வடமொழிப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. நான் என் மனைவியையும் பேராளராக்கி எங்கள் செலவில் கூட்டிச் சென்றேன். நாங்கள் காசி நகரத்தார் விடுதியில் தங்க ஏற்பாடு செய்து கொண்டோம். மாநாட்டு நாட்களில் மாநாட்டு ஏற்பாட்டில் உணவு கொண்டோம். இந்த மாநாட்டிற்கு Birds 'Nature Poetry in the Azhvars' stop girajá கட்டுரை அனுப்பி வைத்தேன். இங்கும் திராவிட ஆராய்ச்சிப் பகுதிக்கு பன்மொழிப் புலவர் தெ. பொ. மீ (அப்போது மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்) தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றிருந்தார் அவர் வர முடியாமையால் டாக்டர் மொ. அ. துரை அரங்கசாமி (மதுரைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்) அத்தலைமைப் பொறுப்பு ஏற்றார். வாரணாசிக்குச் சென்ற வாய்ப்பைக் காசி, அயோத்தி, கயை, புத்தகயை, திரிவேணி (அலகபாத்) திருத்தலப் பயணங்களாகவும் ஆக்கிக் கொண்டோம். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றமும் மதுரைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தி முதல் கருத்தரங்கு தியாகராஜர் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது (மே 30, 31 ஜூன் 1-1969), இந்தக் கருத்தரங்கிற்கு என்னையும் தெலுங்குத் துறை டாக்டர்