பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/656

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

台多多 நினைவுக் குமிழிகள்-4 இந்த T.K. கோபாலசாமி அய்யங்கார் யார்? இவர் திருப்பதியைச் சேர்ந்தவர். வைணவ ஆச்சாரியாரான திருமலை நம்பியின் வமிச வழி வந்தவர். பல்கலைக் கழகம் தொடங்கப் பெற்ற சமயத்தில் எம். ஏ. யில் மூன்றாவது வகுப்பினராக இருந்தும் அக்காலத்தில் மிக்க செல்வாக் குடைய இராமானுஜ தாத்தாச்சாரியாரின் உதவி கொண்டு பல்கலைக் கழகத்தில் நுழைந்து விட்டார். படிப்பறிவை வளர்த்துக் கொள்ளாதவர். பல்கலைக் கழகத்தில் நுழையாததற்கு முன்னர் தேவஸ்தான நிர்வாகத்திலுள்ள கீழ்த்திசைக் கல்லூரியில் பணியாற்றியவர். மனிதர் அழகாக இருப்பார். செம்மேனி எம்மான். பஞ்ச கச்சம் மூடிய மேலங்கி (Close Coat), வெண்மையான தலைப் பாகை, நெற்றியில் வடகலைத் திருமண்காப்பு-இவற் றுடன் இவரைப் பார்க்கும்கால் கண்டாரை ஈர்க்கும் தோற்ற முடையவர். என் அரிய நண்பர் திரு வீரராகவன் (தத்துவத்துறை) இவரைச் சுந்தர வதனம்’ என்றே கிண்டலாக அழைப்பார். கால்கை (காக்கை) பிடிப்பதில் மன்னர். ஆண்டு தோறும் திரு. எ. எல். முதலியாரை (துணைவேந்தர், சென்னைப் பல்கலைக் கழகம்) அவருடைய பிறந்த நாளன்று சந்தித்துப் பெரிய துளப மாலை, பெருமாள் பிரசாதமாகிய லட்டு, திருமால் வடையுடன் சந்தித்து ஒரு வடமொழி சுலோகத்தால் வாழ்த்தி அவர் மனத்தைக் கவர்ந்தவர் என்றும், இதனால் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பலவித சலுகைகளைப் பெற்றுக் கொண்டு வருகின்றவர் என்றும், திருப்பதிப் பல்கலைக் கழகத்து வளாகத்தில் பலர் பேசி வருவதைக் கேட்டிருக்கின்றேன். இப்படித்தான் மூன்றாவது வகுப்புடன் விரிவுரையாளராக இருந்தும் பேராசிரியர் நியமனத்தின் வல்லுநர் குழுவில் 3. திரு T. K. கோபாலசாமி அய்யங்காரும் இன்றில்லை (17-4-90); பல ஆண்டுகட்கு முன்னர் ஆசாரியன் திருவடி நிழலை அடைந்தார்.