பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/657

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் கலந்துகொண்ட இலக்கிய மாநாடுகள்... 6.23 இடம் பெற்றார் என்று K.K. இராஜா மனத்தாங்க லுடன்' சொன்னார்; இதனால்தான் தன் பதவி உயர்வு தனக்கு மகிழ்ச்சி தரவில்லை எனக் குறிப்பிட்டார் போலும்! உடனே என் மனத்தின் ஆற்றல் தன்மையால் (Presence of mind) ஒரு வடமொழி சுலோகத்தின் கருத்து (என் ஆராய்ச்சியின் போது ஈட்டுரையில் கண்டது) நினைவுக்கு வந்தது. 'டாக்டர் இராஜா. தங்கத்தை மதிப்பிடக் குப்பையில் கிடக்கும் குன்றி மணியைப் பயன் படுத்துவதைக் கண்டிருப்பீர்கள். தங்கம் தன் மனவருத்தத் தைச் சொல்லிக் கொள்வதாக ஒரு வடமொழி சுலோகத் தைப் படித்திருக்கின்றேன். தங்கம் சொல்லிற்றாம். "'என்னைநெருப்பில் உருக்குவதை நான் தாங்கிக் கொள்ளு கின்றேன்; சம்பட்டியால் புடைத்து மெல்லிய தகடாக்கு வதையும் பொறுத்துக் கொள்ளுகின்றேன். மெல்லிய துளையுள் செலுத்தி கம்பியாக இழுப்பதையும் பொறுத்துக் கொள்ளுகின்றேன். ஆனால் குப்பையில் கிடக்கும் குன்றிமணியால் என்னை மதிப்பிடுவதைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை' என்றதாம் அருகி லிருந்த அறிஞர் ஒருவர், தங்கத்தை நோக்கி, "கவலைப் படாதே. நிறுக்கும்போது குன்றிமணிக்குப் பெருமை இருப்பதாகத் தோன்றினாலும், நிறுத்தல் வேலை முடிந்த பிறகு தங்கம் தங்கமாகவே தன் நிலை மாறாமல் உள்ளது; குன்றி மணி குப்பைக்குப் போய் விடுகின்றது என்று சமாதானப்படுத்தினாராம்' என்று கூறி நீங்கள் தங்கம்; திரு. கோபாலசாமி அய்யங்கார் குப்பையில் கிடக்கும் குன்றிமணி. தங்கம் அதற்குரிய இடத்தில் உள்ளது; குன்றிமணி குப்பைக்குப் போய்விட்டது' என்று சொன்னேன், டாக்டர் இராஜாவின் மனத்தில் இருந்த மனக்குறை (Obsession) நீங்கி மகிழ்ந்தார்; என்னை அப்படியே கட்டிக் கொண்டார். என் பேச்சை டாக்டர் மு.வ. உட்பட அனைவரும் கேட்டு மகிழ்ந்தனர். @### *@3&sråååg Vishnu Cult in the Ancient Tamil Literature என்ற ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்