பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/658

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁器盛 நிைைவுக் குமிழிகள்-4 திருந்தேன். இந்த ஆண்டு திராவிட மொழிப் பகுதிக்கு. டாக்டர் எஸ். சங்கரராஜு நாயுடு தலைமை வகித்ததாக நினைவு. என்னுடைய 15 பக்கக் கட்டுரையில் 215 அடிக்குறிப்புக்களைக் கண்டு வியந்து பாராட்டினார் கல்கத்தாவில் இருந்த மூன்று நாட்களில் ஒருநாள் காலை கல்கத்தா தமிழ்ச் சங்கத்தின் ஆதா வில் அதன் தலைவர் எங்கட்கு இட்டிவி விருந்து அளித்தார். கல்கத்தாவில் இந்த மரபு இருந்து வருகின்றது. மற்றொரு நாள் மாலை 6 மணிக்கு இராஷ்பீகாரி அவென்யூவிலுள்ள பாரதி தமிழ்ச்சங்கத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. டாக்டர் மு. வ. தாயுமானவர் பற்றியும் நான் "குலசேகராழ்வார்’ பற்றியும் டாக்டர் சங்கர ராஜு நாயுடு தமிழின் தனிப்பெருமை’ என்பதுபற்றியும் பேசினதாக நினைவு. அன்றிரவு ஒரு தென்னிந்திய பிராமண விடுதியில் வற்றல் குழம்புடன் ஒரு சிறிய விருந்து நடைபெற்றது. கல்கத்தாவில் இன்னார் பேசுகிறார். என்று ஸ்டேஸ்மன்' பத்திரிகையில் செய்தி தந்துவிட்டால் போதும்; பெருந்திரளாகத் தமிழர் கூடிவிடுவர். தனி அழைப்பு அனுப்பத் தேவை இல்லை. இந்த மரபைக் கண்டு வியந்து போனேன். மாநாடு முடிந்து ஒருநாள் அதிகமாகத் தங்கினதாக நினைவு. டாக்டர் மு. வ. வும் நானும் ஒரு நாள் மாலை கிருட்டிணசாமி என்னும் நண்பர் வீட்டுக்குப் போனதாக நினைவு. மாநாடு முடிந்ததும் அறையைக் காலி செய்து கொண்டு கல்கத்தாவிலுள்ள நகரத்தார் இல்லத்திற்குச் (34, எஸ்ராதெரு. கல்கத்தா-1) சென்று ஒருநாள் தங்கினேன். அன்று புகழ்வாய்ந்த தேசிய நூலகம் வானக் காட்சி நிலையம் (Planetorium இவற்றைப் பார்த்துக் கொண்டு நூலகத்தின் முன்புறமுள்ள பெரிய மைதானத் தில் காற்று வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தபோது மு. வ. வும் சங்கரராஜ் நாயுடுவும் எங்கோ சுற்றி விட்டு அங்கு வந்து சேர்ந்தனர். அடுத்த நாள் காலையில் கல்கத்தாவிலிருந்து திரும்பினோம்.