பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/659

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் கலந்துகொண்ட இலக்கிய மாநாடுகள்: 6.25 1970-மே 29, 30, 31 ஆம் நாட்களில் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் கருத்தரங்கு திருச்சியில் நடைபெற்றது. இதற்கும் என்னைப் பேராள ராகப் பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தது. நான் “The Tirumurais and the Nalayiram;- theit codifications’ என்ற ஆங்கில ஆய்வுக் கட்டுரை அனுப்பினேன். நாங்கள். தங்குவதற்கும் உணவிற்கும் புனித சூசையப்பர் கல்லூரி மாணவர் உணவு விடுதியில் வசதிகள் செய்யப் பெற்றிருந் தன. இந்தச் சந்தர்ப்பத்தில் திருச்சி வானொலியில் அருளுரை என்ற தலைப்பில் நம்மாழ்வார் கருத்துக்கள்ை மூன்று நாட்கள் 48 மணித்துளிக் காலை நிகழ்ச்சிகட்கு பதிவு செய்தேன். டாக்டர் மு.வ. வுக்கு ஆற்றில் நீராடுவதற்கு விருப்பம் அதிகம். டாக்டர் மு.வ. வுக்குத் தமிழகமெங்கும் வீர வழி பாட்டாளர்கள் உண்டு. திருச்சிப் பகுதியில் 15 பேர் அவரைச் சூழ்ந்து கொண்டனர். இவர்களுடன் இரண்டு நாட்கள் காவிரியில் நடந்தே திரும்பினோம். நாங்கள் தங்கி யிருந்த இடத்திற்கும் காவிரிக்கும் சுமார் முக்கால் கல் தொலைவே. டாக்டர் மு. வ. நகைச்சுவை விருந்து அளிப்ப தில் என்னைத் தூண்டிக்கொண்டே இருப்பார். தேசியக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் இராசகோபாலன் மு.வ. வின் அணுக்கத் தொண்டராகச் செயற்பட்டார். சதா புன்முறுவலுடன் திகழும் இவர் என்னுடைய நெருங்கிய நண்பருமானார். இப்போது பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இலாலுகுடிப் பகுதியைச் சேர்ந்தவர் இவர். 1971-ஜூன் 1, 2, 3 நாட்களில் இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மூன்றாவது கருத் தரங்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடை பெற்றது. P. செளரிராசனைப் பேராளராக அனுப்பு நி -40