பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நினைவுக் குமிழிகள்.4 களில் இடம் பெற்று உணவு தயாரித்துக் கொள்வார்கள். சத்திரத்தில் பாத்திரங்கள் வாடகையின்றி இலவசமாகக் கிடைக்கும். வெளியில் விறகு, அடுப்பு, மளிகை சாமான்கள் முதலியவை கிடைக்கும் பயணிகளே விறகைத் தவிர அனைத்தையும் தம் ஊரிலிருந்தே கொண்டு வந்து விடுவார்கள். தேவையுள்ளவற்றை மட்டிலும் இங்கு வாங்கிக் கொள்வார்கள். முடியெடுத்தல், தீர்த்தமாடுதல் களை முடித்துக்கொண்டு தரிசனத்திற்குத் தயாராகி விடு வார்கள். குழந்தைகட்கு முடி எடுக்கும் இடத்திலேயே குறைந்த கட்டணத்திற்கு வெந்நீர் கிடைப்பதற்கு தேவஸ்தான ஏற்பாடு உண்டு. குளிர்காலமானால் பெரிய வர்களும் வெந்நீர் ஏற்பாட்டைப் பயன் படுத்திக் கொள்ளலாம். திருப்பதியிலும் கடந்த சில ஆண்டுகளாக சத்திரத்தில் தங்குவதற்கும் சமையல் செய்து கொள்வதற்கும் வசதிகள் செய்துள்ளனர். ஆனால் நெடுங்காலமாகத் திருப்பதியில் மலையடிவாரத்திற்குச் சுமார் ஒரு கல் தொலைவில் சில குடும் பங்கள் இவ்வகைப் பயணிகட்கு தம் இல்லங்களில் குறைந்த வாடகையில் இட வசதிகள் அளித்து வருகிறார் கள். இவர்கள் மளிகைக் கடை, விறகுக்கடை முதலிய வற்றையும் நடத்தி வருகிறார்கள். இதுவே இவர்கள் வாழ்க்கைத் தொழிலாக இருந்து வருகின்றது. பாகவத கைங்கரியம்’ போலவும் அமைந்து விடுகின்றது. ஒருசிலர் இவர்களைக் கொள்ளையடிப்பவர்களாகக் கருதுகின்றனர். இக்கருத்து தவறு என்றே எனக் குப் படுகின்றது. இவர்கள் தtரிசனம் செய்து வைக்கும் வரை பொறுப்பேற்றுக் கொள்வது மிகவும் பாராட்டத்தக்கது. எங்கோ இருந்து முன்பின் தெரியாமல் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்ட மாதிரி திருப்பதிக்கு வரும் அப்பாவி மக்கட்கு இத்தகைய தொண்டாற்றுவது இறைவழிபாட்டிற்கு ஒப்பாகும். ஏன்? பாகவத கைங்கரியத்திற்கும் ஒப்பாகும். வைணவ சமயக்