பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/660

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 நினைவுக் குமிழிகள்= மாறு பல்கலைக் கழகத்திற்கு எழுதி நான் என் சொந்தப் பொறுப்பில் கலந்து கொண்டேன். நான் இந்தக் sq933d ope; “The Nalayiram and the Tirumnrais; A. Birds Eye Comparative View stairp ஆய்வுக் கட்டுரையை அனுப்பி வைத்தேன். இந்தக் கருத்தரங்கைப் பயன் படுத்திக் கொண்டு தில்லை நடராசனையும் இவனது ஆடலைப் பார்த்துக் கொண்டு சயனத் திருக்கோலத்தில் கண்டுகளிக்கும் தில்லைக் கோவிந்தனையும் சேவித்தேன். பல்கலைக்கழக வளாகத்திலேயே இருக்கும் திருவேட் களத்து ஈசனையும் வணங்கினேன். இந்தச் சமயத்தில் மு. வ. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்த ராக வரும் வதந்தி காட்டுத் தீ போல் பரவியது. திரு ஒ. பாலசுப்பிரமணியம் ஆளுநர் கே கே ஷாவின் தமிழாசிரியராக நியமனம் பெற்ற செய்தி தினத்தந்தியில் வெளியாகி பலரை மகிழ்வித்தது. 1971-ஜூன் 3-4 நாட்களில் திருவனந்தபுரத்தில் நடை பெற்ற முதல் மொழியியல் மாநாட்டிற்கு என்னைப் பல்கலைக்கழகம் பேராளராக அனுப்பி வைத்தது. மாநாடு திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கலைகல்லூரியில் நடை பெற்றது. இதற்கு நான் ஆய்வுக் கட்டுரை வழங்கவில்லை. தான்தான் இந்த மாநாட்டிற்குத் தகுதி பெற்றவன் என்றும் பல்கலைக்கழகம் என்னை அனுப்பினது தவறு என்றும். இல்லாததையும் பொல்லாததையும் முதல்வர் K. நீலகண்டத்திடம் கூறிப் பகீரதப் பிரயத்தனம் செய்தார் தாமோதரன்.முதல்வரும் என்னை அனுப்புவதைத்தவிர்க்கு மாறு பல்கலைக் கழகத்திற்கு எழுதுமாறு கேட்டுக் கொண் டார்.திரைமறைவில் தாமோதரன் நடத்தியநாடகம்புலனா யிற்று. நான் முதல்வரிடம் உங்கட்குத் துணிவு இருப்பின் எனக்குப் பிறப்பித்த ஆணையை மாற்றி தாமோதரனை அனுப்புமாறு நீங்களே எழுதுங்கள்’’ என்று கூறி என் உள்ளத்தை தெளிவு படுத்தினேன். முதல்வர் வாயை மூடிக்கொண்டு வாளா இருந்து விட்டார். மாநாட்டின்