பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/661

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் கலந்துகொண்ட இலக்கிய மாநாடுகள். 627 நோக்கத்தையும் திராவிட மொழிக்கழகம்' என்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்துவதற்கு டாக்டர் v. i. சுப்பிர மணியத்தின் மேற்கொண்ட முயற்சியையும் தெரிந்து கொண்டேன். கெடுமிட ராய எல்லாம் கேசவா என்ற வுடன் தீயினில் தூசாகச் செய்யும் அனந்தசயனப் பெருமாளைச் சேவித்தேன். கலைக்கல்லூரித் தமிழ்ச் சங்கத்தில் ஓர் அரைமணி நேரம் பேசியதாக நினைவு. 1971-திசம்பர் 26, 27, 28 நாட்களில் அனைத் திந்தியக் கீழ்த்திசை மாநாட்டுக் கருத்தரங்கு (26-வது அமர்வு) உஜ்ஜயினியில் நடைபெறுவதாக இருந்தது. உஜ்ஜயினி (உச்சயினி) தமிழ் இலக்கியத்தில் உஞ்சை என்று குறிப்பிடப்பெறும். அவசரநிலை பிரகடனப்படுத்தப் பெற்றதால் இக்கருத்தரங்கு அத்தேதிகளில் நடைபெற வில்லை. இக்கருத்தரங்கு 1972-அக்டோபர் 26, 27, 8 நாட்களில் நடைபெற்றது. பல்கலைக்கழகம் என்னைப் பேராளராக அனுப்பி வைத்தது. இக்கருத்தரங்கிற்கு (1) The Alvar's Concept of Salvation, (2) Two Sects of South Indian Vaishnavism arsi, so QuairG ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வைத்தேன். மாநாடு மிகச் சிறப் பாக நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் W. வேங்கடாச்சலம் (வடமொழி) அங்கு ஒர் அரசினர் கல்லூரியில் பணியாற்றி வந்தார். அவர் துTண்டுதலால் தான் இக்கருத்தரங்கு விக்ரம் பல்கலைக்கழகம் நடத்த முன் வந்தது. இது தவிர இவர் ஆண்டுதோறும் அரசு ஆதரவால் வடமொழிச் சம்மேளத்திற்கு ஏற்பாடு செய்து நாட்டிலுள்ள வடமொழிப் புலவர்களையெல்லாம் பாராட்டி வருவது நாம் வியக்கத் தக்க செய்தியாகும். தவிர, இம்மாநாட்டை முன்னிருந்து நடத்தியதும் பேராசிரியர் W. வேங்கடாசலமேயாகும். உஜ்ஜயினி . முத்ெ தாள்ளாயிர விளக்கம்-பாடல்.63: பெருங் கதையில் உஞ்சைக் காண்டம் நினைவு கூாது.