பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/662

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 - நினைவுக் குமிழிகள்-8 செல்வதற்குமுன் இவர் சென்னை விவேகாநந்தர் கல்லூரியில் வடமொழித் துறையில் பணியாற்றியவர். உச்சயினி காளிகோயில் பெரும் புகழ் மிக்கது. ஒரு நாள் அங்குச்சென்றுச் காளிதேவியை வழிபட்டேன்.பாரதி யாரின் வழிபடும் தெய்வம் அல்லவா? இத்திருக் கோயிலுக்கு வந்தபோது காளிதேவி பற்றிய பாரதியாரின் பாடல்கள் நினைவில் எழுந்தன. கோயிலுக்கருகில்தான் அங்காடிகள் நிறைய இருந்தன. மருதாணியின் இலைத் துரள்கள் (ஈரமில்லாதது) குவியல் குவியலாய் ஒவ்வொரு கடையிலும் இருந்தன. சிறிது நீர் விட்டுக் குழைத்து அப்படியே பயன்படுத்தலாம். காளிதேவியின் உருவம் அச்சத்தைக் கிளப்பும் பாங்கில் அமைந்திருந்தது. கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து அன்னையைச் சேவித்துச் சென்றதைக் கண்டு மகிழ்ந்தேன். ஒருநாள் நானும் பண்டிட் வி. நடேசனாரும்: (சென்னையில் உள்ள பெரும் புலவர்: ஓய்வு பெற்றவர். இந்த மாநாடுகட்கு இவர் வருவது தவறுவதில்லை) ஒரு வாடகைக் கார் வைத்துக்கொண்டு பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். கிருஷ்ணனைப் பற்றிய பல நினைவுச் சின்னங்கள் என் மனத்தைக் கவர்ந்தன. கண்ணன் இரண்டே மாதங்களில் சாந்தீபினி என்ற முனிவரிடம் கலைகளனைத்தையும் கற்றதாக வரலாறு. அந்த சாந்தீபினி இருந்த இடம் எங்கள் மனத்தைக் கவர்ந்தது: கண்ணன் கோயிலும் அங்கு இருந்தது. அவனை வழிபட்டு வெண்ணெய் முதலிய பிரசாத வகை களைப் பெற்று உண்டோம். ஒருநாள் பிற்பகல் முழுவதும் இங்ங்ணம் பல இடங்களுக்குச் சென்று திரும்பினோம். திரும்பும் போது போபாலில் இறங்கினேன். சென்னை யிலிருந்து வந்தபோதும் இந்த இடத்தில் இறங்கித்தான் இருப்பூர்தி மாற்றி வேறு திசையில் உச்சயினிக்குச் செல்லுதல் வேண்டும். போபாவில் S. அப்பாவு என்ற