பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/663

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான்.கலந் துகொண்கு இலக்கிய மாநாடுகள். 6 39. பள்ளி-கல்லூரி வகுப்புத்தோழர் அஞ்சல் துறையில் பெரிய பதவியில் இருந்தார். ஒருநாள் காலை சிற்றுண்டிக்குப் பிறகு பிர்லாமந்திருக்கு தன் ஸ்கூட்டரில் இட்டுச் சென்றார். ஊர் அமைப்பு மேடும் பள்ளமுமாக இருந்த தாக நினைவு. மாலையில் பாரத் கனரக மின்சாரத் தொழிற்சாலைக்கு இட்டுச் சென்றார். அன்று ஏதோ ஒரு கூட்டம்: அதிலும் கலந்து கொண்டோம். பல இடங் களைப் பார்த்த பிறகு இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பி னோம். மறுநாள் சென்னை செல்லும் இருப்பூர்தியில் இட ஒதுக்கீடு செய்திருந்தார் நண்பர். வசதியாகத் திரும்பி னேன். 1972-டிசம்பர் 17, 18, 19இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழில்-இலக்கணக் கொள்கைகள்31’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இதற்குத் 'தமிழ் ஒலியன்கள் - தொல்காப்பியம்' என்ற ஆய்வுக் கட்டுரை அனுப்பினேன். 1973-திசம்பரில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பத்து நாள் கருத்தரங்கில் 31-1-78 அன்று தடைபெற்ற அமர்வில் வைணவ சமய நூல்கள்' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை படித்தேன். இது பல்கலைக் கழகம் வெளியிட்ட தெய்வத்தமிழ்' என்ற தொகுப்பு நூலில் இடம் பெற்றது. 1974 திசம்பர் 26, 27, 28 இல் அனைத்திந்தியக் கீழ்த் திசை மாநாட்டுக் கருத்தரங்கு (27-வது அமர்வு) குருட்சேத்திரா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. @g5 fò@; (1) God-Soul Relationship in the Nalayiram, {2) A critical Note on the Codification of Nalayiram என்ற இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பினேன். இந்த முறை பல்கலைக் கழகம் என்னைப் பேராளனாக அனுப்ப வில்லை, என் சொந்தச் செலவில் செல்ல வேண்டிய