பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/664

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.30 நினைவுக்குமிழிகள் தாயிற்று. என் ஆராய்ச்சி மாணவர் திரு. என். கடிகாசலத்தையும் துணைக்குக் கூட்டிச் சென்றேன். குருட்சேத்திரா பல்கலைக்கழகம் அரியானா மாநிலத். தில் உள்ளது. தில்லியிலிருந்து பானிபட் வழியாகச் செல்ல வேண்டும். பல்கலைக் கழகம் ஒரு பரந்த மைதானத்தில் அமைந்துள்ளது. துறைக்குரிய கட்டடங்கள் பெரிய இடைவெளிகளுடன் அமைந்துள்ளன. மாணவர்கள் மிதிவண்டி வைத்துக் கொண்டிருந்தால் பல இடங்கட்குப் போக வசதியாக இருக்கும். ஒரிடத்தில் பார்த்தனுக்குக் கண்ணன் சாரதியாக இருந்த நிலையில் நல்ல அழகான நினைவுச் சின்னம் வைக்கப் பெற்றுள்ளது. அரை ஃபர்லாங் சதுரத்தில் ஒரு பெரிய செயற்கைத் தடாகம் வெட்டப் பெற்று அதில் தூய்மையான நீர் நிரப்பப் பெற்றுள்ளது. நான்கு பக்கங்களிலும் படித்துறைகள் கட்டப் பெற்றுள்ளன. ஒரே சமயத்தில் இலட்சக்கணக் கான மக்கள் நீராடலாம். நீர் அழுக்கேறி தூய்மையற்ற தாக ஆகும்போது அதைக் காலி செய்து புதிய நீர் நிரப்பவும் வசதிகள் செய்யப் பெற்றுள்ளன. அழுக்குநீர் வீணாகாமல் ஏரிகளில் தேங்கவும் அதனைப் பாசனத் திற்குப் பயன்படவும் ஏற்பாடுகள் செய்யப் பெற்றுள்ளன. பண்டிட் நடேசனார். கடிகாசலம், நான்-மூவரும் எங்குச் சென்றாலும் சேர்ந்தே சென்று திரும்புவோம். வட மாநிலங்களில் இங்ங்ணம் செய்யப் பெற்ற வசதிகள், தொழிற்சாலைகள், வேலை வாய்ப்பு வசதிகள் இவற்றைத் தென்னகத்திலுள்ள வசதிகளுடன் ஒப்பிடும்போது அறிஞர் அண்ணா சொன்ன 'வடக்கு வாழ்கிறது: தெற்கு தேய்கிறது' என்பதில் உண்மை இருக்கும்போல் தோன்று கின்றது. இதற்குக் கழுவாயாக ஆண்டவன்தான் வழி அமைக்க வேண்டும். இந்த மாநாட்டில் திராவிட மொழி ஆராய்ச்சிப் பகுதிககுத் தலைவனாக (28-வது அமர்வுக்கு) என்னைத்