பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/665

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் கலந்துகொண்ட இலக்கிய மாநாடுகள்... 631 தேர்ந்தெடுத்தனர். மாநாடு முடிந்ததும் நாங்கள் மூவரும் தில்லி திரும்பினோம். பழைய தில்லி இருப்பூர்தி நிலையத் தில் "ஜனதா ஒய்வு அறையில் இரவைக் கழித்தோம்: அதிகாலையில் நீராட்டத்தையும் சிற்றுண்டியையும் முடித்துக் கொண்டு தில்லி மாநகரைச் சுற்றிப் பார்த்தோம். நேரு இல்லம், குதுப்மினார். கன்னாட் வட்டம் (கடைவீதி), செங்கோட்டை, சாந்திவனப் பகுதி கள். ராம்லீலா மைதானம். ஜும்மாமசூதி, ஜவாஹர்லால் பல்கலைக் கழகம் முதலான இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். இதற்கு இரண்டு நாட்கள் ஆயின. இரண்டாம் நாள் மாலை மதுரா வந்து விட்டோம். இருப்பூர்தி நிலையத்திலுள்ள ஜனதா தங்கும் அறையில்’’ இரவைக் கழித்தோம். மறுநாள் காலை கண்ணன் கோயில், கண்ணன் பிறந்த சிறைச்சாலை, துவாரகநாதர் கோயில், மதுரா நகர் - இவற்றையெல்லாம் கண்டு களித்தோம். கண்ணன் பிறந்த சிறைச்சாலைப் பகுதியைமிகப் பெரிய இடம்-பளிங்குக் கற்களால் வேயப் பெற்றிருந்தது. திருத்தலப் பயணிகள் தங்குவதற்கும் பிற வசதிகட்கும் ஒரு பெரிய அழகான மாளிகையின் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. வடமதுரையில் இரு ந் த போது நம்மாழ்வார்ன் கொண்ட பெண்டிர் (திருவாய் 9, 1) என்ற திருவாய் மொழி மனத்தில் குமிழியிட்டுக் கொண்டிருந்தது. பகவானே எல்லா உறவும் என்று கூறுவது இத்திருவாய் மொழி. அரணம் ஆவர் அற்றகாலைக் கென்றென் றமைக்கப் பட்டார் இரணம் கொண்ட தெப்பர் ஆவர்; இன்றியிட் டாலுமஃதே