பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/666

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.32 நினைவுக்குமிழிகள்-4 வருணித்து என்னே! வடமது ரைப்பிறந் தவன்வண் புகழே சரனென் றுய்யப் போகல் அல்லால் இல்லைகண் டிர்சதுரே' (அரணம்-கைம்முதல்; இரணம்-கடன்; தெப்பர்புல்வியர் * ஆபத்துக்கு உ த வு வ ர் என்று சுற்றத்தவரை ஆராதித்துப் பயன் இல்லை: காரணமின்றி உதவி செய்பவனான எம்பெருமானின் கல்யாண குணங்களே நமக்கு இரட்சகம் என்று எண்ணி உய்வோம்' என்கின்றார். இத்திருவாய்மொழிப் பாசுரங்கள் யாவும் இப்படியே நடைபெறுகின்றன. அன்று மாலை கண்ணன் கன்றுகளை மேய்ந்துத் திரிந்த பிருந்தவனத்தைக் காணத் திட்டம் இட்டோம். போகவும் திரும்பவும் ஒரு குதிரை வண்டியை(தோங்கா) அமர்த்திக் கொண்டு (10 கி.மீ. தொலைவு) புறப் பட்டோம். நெருஞ்சிக் காடாக இருந்த அந்த வனம் கண்ணன் திருவருளால் பசுக்கள் முதலானவை பெருகு வதற்கு ஏற்ப மிகச் செழிப்புற்றது. இங்குத்தான் கண்ணன் ஆநிரைகளை மேய்த்துக் கொண்டும் பல திருவிளையாடல்கள் புரிந்து .ெ கா ன் டு ம் காலம் போக்கினன். குழலூதிக் கோபியருடன் இராசக்கிரீடை (குரவைக் கூத்து) நிகழ்த்திய இடமும் இதுவே. இப்பகுதி யில்தான் காளியன்மடு, கோபியரின் துகிலுரிந்த கட்டம்" கேசி என்ற அசுரனைக் கொன்ற இடம் (கேசிகட்டம்) கோபியரின் பக்திப் பரவசத்தைக் கண்ட அக்குரூரர் கண்ணிர் மல்க விழுந்து விழுந்து புரண்ட இடம், குழலூதிக் கோபியரின் உள்ளத்தைக் கவர்ந்தவனம்; (பான்சிவனம்) மற்றும் சேவாகுஞ்சம், பக்தவிலோசனம் முதலானவற்றைப் பார்த்து மகிழ்ந்தோம். சரியான வழிகாட்டி கிடைக்காததால் அருகிலுள்ள அரங்கமந்திர் 2. திருவாய்-9.10:4