பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/667

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் கலந்துகொண்ட இலக்கிய மாநாடுகள்: 等喜、 {பூரீ ரங்கTமந்திர்) என்ற திருக்கோயிலைப் பார்க்கத் தவறி விட்டோம். இப்பகுதியைச் சுற்றிப் பார்த்த போது, காளியன் பொய்கை கலங்கப்பாய்ந் திட்டவன் நீள்முடி ஐந்திலும் நின்று நடஞ்செய்து மீள அவனுக் கருள்செய்த வித்தகன் -பெரியாழ். திரு 3.9.7 காயுநீர் புக்குக் கடம்பேறி காளியன் தீய பணத்தின் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி வேயின் குழலூதி வித்தக னாய்நின்ற ஆயன் - டிெ.2:1:3 என்பன போன்ற பாசுரங்களும் என் மனத்தில் குமிழி யிட்டன. மாலை 7-மணிக்குள் மதுரை திரும்பி விட்டோம். இரவில் இந்த வழியில் வருவோரைக் கொலை செய்து பணம் பறிக்கும் செயல் நடைபெறுவதாக வண்டிக் காரன் சொன்னபோது எங்கள் மனத்திலும் திகில்" ஏற்பட்டது. அன்றிரவும் இருப்பூர்தி நிலையத்து 'ஜனதா ஒய்வு அறையிலேயே’’ தங்கினோம். மறுநாள் சாமான்களைப் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு டெல்லியிலிருந்து வரும் ஆக்ரா விரைவு வண்டியில் ஏறி ஆக்ரா வந்தோம். கட்டணம் செலுத்தி அரசுப் பேருந்தில் ஏறிச் செங்கோட்டை, தாஜ்மகால் என்ற இடங்களைப் பார்த்து விட்டு ஃபாதேபூர் சிகரியிலுள்ள அக்பர் கட்டிய செங்கோட்டையைப் பார்த்தோம். வண்டியில் வந்த அரசு வழிகாட்டி ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு பகுதியையும் அற்புதமாக விளக்கினார். சரளமான ஆங்கிலப் பேச்சு: வரலாற்றுப் பேராசிரியர்கள் கூட இவர் விளக்கப் பேச்சைக் கேட்டால் நாணிப்போவார். அன்று மாலையே அதே பேருந்தில்-இருப்பூர்தியில் மதுரை வந்து