பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/668

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634 நினைவுக்குமிழிகள்-4 சேர்ந்தோம். சாமான்களைத் திரும்பப் பெற்றுச் சென்னைக்கு வரும் விரைவு இருப்பூர்தியில் இடம் பிடித்து ஏறி செளகர்யமாக கூடுர் வந்து சேர்ந்தோம். நண்பர் நடேசனார் நேராகச் சென்னை சென்றார். நானும் கடிகாசலமும்இருப்பூர்தியில் நீராடி உணவு கொண்டோம். பிற்பகல் திருப்பதி செல்லும் இருப்பூர்தியில் ஏறி திருப்பதி: வந்தடைந்தோம். அனைத்திந்தியக் கீழ்த் திசை மாநாட்டின் கருத்தரங்கு. (28-வது அமர்வு) கர்நாடகப் பல்கலைக் கழகத்தில் (தார்வார்) 1976 நவம்பர் 10, 11, 12 நாட்களில் நடை பெற்றது. இந்த அமர்வுக்கு திராவிடமொழி ஆய்வுப் பகுதிக்கு குருட்சேத்திராவில் நடைபெற்ற 27-வது அமர்வில் நான்தலைவனாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றிருந் GA56ör. ĝ)ß5 gjuoffsjšG (1) The Nalayiram as Dravid Veda (2) Instituitions of Popular Culture in the Ancient Tamif Country என்ற இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி விட்டேன். முதலில் பல்கலைக் கழகம் என் செலவில் போகுமாறு பணித்தது. ஆனால் துணைவேந்தர் மூர்த்தி யைப்பார்த்து பல்கலைக் கழகச் செலவில் அனுப்புமாறு: கேட்டேன். என் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தார்; பல்கலைக் கழகமே என்னைப் பேராளராக அனுப்பி வைக்கும் ஆணை பிறப்பிக்கப் பெற்றது. பேராசிரியர் K.S. மூர்த்தி அவர்கள் தாம் ஆந்திரப் பல்கலைக் கழகத். தில் தத்துவப் பேராசிரியராக இருந்தபோது இத்தகைய இடர்ப்பாடுகளைச் சந்தித்திருக்க வேண்டும் என்று. நினைத்துக் கொண்டேன் இனி என் தலைமையுரையைத் தயாரிக்கவேண்டும். இதற்குத் தென்னகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் துறைகளில் பணியாற்றும் பேராசிரியர்கட்கு எழுதி அவர்களிடமிருந்து பெற்ற மறுமொழிகளைக் கொண்டு என்னுடைய