பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/669

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் ža izrazravi- இலக்கிய மாநாடுகள். 635 தலைமையுரையைத் தயாரித்தேன். மாநாட்டிற்குப் போகும் போது என் ஆய்வு மாணவர் N. கடிகாசலத்தை யும் கூட்டிக் கொண்டு சென்றேன். வயது முதிர்ந்த நிலையில் துணைக்காகவே அழைத்துச் சென்றேன். குருட்சேத்திரத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கும், தார்வாரில் நடைபெற்ற மானியத்திற்கும் பல்கலைக் கழகத்திற்கு எழுதிப் பயணப்படி வாங்கித் தந்தேன். தார்வாரிலுள்ள பல்கலைக் கழகம் நல்ல சூழ்நிலையில் அமைக்கப் பெற்றிருந்தது. தங்குவதற்கு நல்ல வசதிகள், உணவுக்கும் நல்ல ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தன. தென்னார்க்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த ரெட்டி என்பவர் (தமிழ் எம்.ஏ. படித்தவர்) அங்கு மொழியியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் அதே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த, கன்னடம் எம்.ஏ.படித்த கன்னடப் பெண்ணைக் காதல் திருமணம் செய்து கொண்டிருந்தார். அவரும் எங்களை நன்கு கவனித்துக் கொண்டார். ஒருநாள் எங்களைத் தம் வீட்டிற்கு அழைத்து பிஸ்கோத்து காஃபி அளித்தார். பகுதித் தலைவர்களின் தலைமையுரைகள் ஒரே மேடையில் நிகழ்த்தப் பெற்றன. அதன் பிறகு மறுநாள் தொடங்கி தனித்தனி அறையில் அந்தந்தப் பகுதிகளில் ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப் பெற்றன. திராவிட மொழியியல் பகுதியில் கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப் பெற்றன. கட்டுரை கள் யாவும் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்ற மரபு இருந்தது. கடிகாசாலம் இரண்டு அமர்வுகளிலும் கட்டுகள் படித்தார். கர்நாடக மாநிலத்தில் கம்பு, சோள ரொட்டிகள் பேர் போனவை. உண்பதற்குச் சுவையாக இருக்கும். நான் பயந்து பயந்து ஒன்று அல்லது இரண் டிற்கு மேல் உண்பதில்லை. திரும்பும்போது ஒரு மயிர்ப் பட்டாலான ஒரு மேலங்கி என் மனைவிக்காக வாங்கி வந்தேன். அது இன்றளவும் பீரோவில் உறங்குகின்றது.