பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/670

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§3 6. - நினைவுக் குமிழிகள்-4 இங்ங்னம் பல மாநிலங்களில் நடைபெற்ற மாநாடு களில் படிக்கப் பெற்ற ஆய்வுக் கட்டுரைகளையெல்லாம் தொகுத்து Collected Papers என்ற தலைப்பில் நூல் வடிவாக்க வேண்டுமென்பது என் கனவு. இறையருளால் சென்னை வந்த பிறகு என் கனவு நனவாகியது. எல்லாம் வேங்கடவாணனின் திருவருள், குமிழி-233 77. ஓய்வு பெற்றதும் சென்னை வருகையும் 6Tன் வாழ்க்கையில் ஒரிடம் விட்டுப் பிறிதோரிடத் தில் அமரும் போது ஏதாவது தொல்லை வருவது மரபாக அமைந்து விடுகின்றது, துறையூரிலிருந்து காரைக்குடி போகும்போது நிர்வாகம் எனக்கு விடுதலை தரமறுத்த தால் மூன்று மாத வரைவூதியம் கட்டி மனக் கசப்புடன் விடுதலை பெற வேண்டியதாயிற்று. காரைக்குடியில் அப்படி நிகழவில்லை. தொடர்புரிமையுடன் (Liem) இரண்டாண்டு விடுமுறை தந்துக் கழற்றிவிட்டனர். மகிழ்ச்சியுடன் சென்று திருப்பதியில் பணியை ஒப்புக் கொண்டேன். ஆனால் சேர்ந்து பத்து நாட்கள் கூட முடிவதற்கு முன்னர் திரும்பி வந்து பதவியேற்க வேண்டும் என்றும், இல்லாவிடில் மூன்று மாத வரைவூதியம் செலுத்த வேண்டும் என்றும் ஆணை வந்தது பணம் கட்டிவிட்டுத் திருப்பதியிலேயே தங்கிவிட்டேன், திருப்பதியிலும் நல்ல மனப்பான்மையுள்ள துணைவேந்தர் துணையால் பதவி உயர்வு கிடைத்தது. திரு க. அன்பழகனிடம் என்னை மேலும் ஐந்தாண்டு வைத்துக் கொள்வதாகச் சொன்னபடி தமிழக மானியம் கிடைக்கும் வரையிலும் என்னைப்