பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/671

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்வு பெற்றதும் சென்னை வருகைக்கு 637 பேராசிரியராக வைத்துக் கொள்ளும் எண்ணம் தொனிக் கும்படி ஆணையும் பிறப்பிக்கப்பெற்றது. இந்த ஆணை கிடைத்து இரண்டு திங்கள் முடிவதற்குள் செப்டம்பர்-30 தேதி ஒய்வு பெற வேண்டும் என்ற கட்டளையும் வந்தது. துணைவேந்த்ரிடம் இதுபற்றி விவரம் கேட்டதற்கு 60வயதிற்கு மேல் பணிபுரிய விதி இடம் தரவில்லை. என்றார். பதிவாளரைப் பார்க்கும் படியும் பல்கலைக் கழக வழக்குரைஞரைப் பார்க்கும் படியும் அறிவுரை கூறினார். சாதியாரின் தொந்தரவு பொறுக்க முடியாமல் தம் வாக்கினின்றும் பின் வாங்குகின்றார் என்பது தெளி வாவிற்று. நான் பணிவாக இப்படிப் பார்ப்பதைவிட உயர் நிதி மன்றத்தில் வழக்கு போட்டு பார்த்து விடலாம் என்றும், இம்முறையைக் கையாளுவதால் தன்னைத் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டேன். செப்டம்பர்-24 (1977) அன்று முற்பகல் திரு, S. A. அனந்தசயனம் அய்யங்கார் பல்கலைக் கழகத்தில் ஏதோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஜஸ்டிஸ், சூரியமூர்த்தி என் மணிவிழாவில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் திரு. அய்யங்காரைத் தலைமை யேற்குமாறு வேண்டிக் கொண்டேன். அவரும் அன்புடன் ஒப்புக் கொண்டார். காலையில் திரு. அய்யங்காரிடம் துணைவேந்தர். பாருங்கள் ஐயா, உங்கள் டாக்டர் ரெட்டியார் என்மீது ரிட் போடப் போகிறாராம். இது நியாயமா? தடுத்து நிறுத்துங்கள்' என்று கேட்டுக் கொண் டாராம. அதற்குத் திரு அய்யய்கார். நீங்கள் டாக்டர் ரெட்டியாரைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். மிகவும். நல்லவர். உங்கள்மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும். வைத்துக் கொண்டுள்ளார். நீங்கள் பதவி உயர்வு, நல்கியதைப் பாராட்டாத நாட்களே இல்லை. என்னிடமே பத்துத் தடவைகட்கு மேல்சொல்லியிருப்பார். பல் இடங்களில் சொல்லி வருவதையும் கேள்விப்படு: