பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/672

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 நினைவுக் குமிழிகள்-4 கின்றேன். பல்கலைக் கழகம் அனுப்பிய நியமன ஆணை யின் வாசகத்தின் பொருளைச் சோதித்தறிவதற்காகத் தான் நீதிமன்றத்துக்குப் போகிறாரேயன்றி உங்கள் மீதோ தான் பணியாற்றும் பல்கலைக் கழகத்தின் மீதோ வெறுப்பின்றிச் செயல்படுகின்றார். நீங்கள் அவர்மீது கோபம் கொள்ள வேண்டா. அவருக்குச் சொந்தப் பொறுப்பில் பெருஞ் செலவு. உங்கட்குக் கைப்பிடிப்பு இல்லை; பல்கலைக் கழகம் செலவழிக்கின்றது' என்று சொன்னாராம், மணிவிழா நடைபெற்ற மறுநாளே (செப்டம்பர்-25) ஐதரபாத் சென்றேன். என் நண்பர் திரு. B. S. K. இராமச்சந்திரன் (இயக்குநர், அரசு அச்சகம்) சிற்றுந் துடன் நிலையத்திற்கு வந்து என்னைத் தம் இல்லத்தில் விருந்தினனாக வைத்துக் கொண்டார். பர்கத்புராவில் இருக்கும். திரு P. பாபுலு ரெட்டி வீட்டிற்குச் சென்றேன். அவர் நீதிமன்றத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். மாலையில் வருமாறு பணித்தார். அங்ங்னமே மாலையில் சென்று ரிட்மனு தயாரிக்கச் செய்தேன். மறுநாள் ரிட்மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அன்றே பல்கலைக் கழக ஓய்வு பெறும் ஆணையை நிறுத்தி வைக்கும்படி உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கின் வாய்தா 19 நாள் தள்ளிப் போடப்பட்டது. 10 நாள் கழித்து மீண்டும் நான் ஐதரபாத் சென்றேன். அன்றும் முடிவு சொல்லவில்லை. உயர்நீதி மன்றம் என் பக்கம் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. பல்கலைக் கழக வழக்குரைஞர் ஏதோ காரணம் சொல்வி 5 நாள் வாய்தா வாங்கினார். அன்றே தீர்ப்புக் கூறத் தயாராக இருந்தார் நீதிபதி. சுருக்கெழுத்தாளரைக் கூடக் கூப்பிட்டுவிட்டார். சில ரிட்மனுவின் தீர்ப்பை உடனுக்குடன் வழங்கி விடுவ துண்டு. பல்கலைக் கழக அலுவலகம் ஆடிப் போயிற்று. என்ன செய்வது என்று தோன்றாமல் விழித்தனர். நியமன ஆண்ணப்படி இன்னும் 20 மாத காலம் இருக்கும் உரிமை