பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/673

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓய்வு பெற்றதும் சென்னை வருகையும் 639. இருந்தது - ஆணையின் வாசகப்படி (தமிழ் நாடு அரசு மானியம் இருக்கும் வரை). திரு. P. பாபுலுரெட்டி பேசியது: "தமிழக அரசு மானியம் இன்னும் 20 மாதம் உள்ளது. நாட்டிலேயே உயரிய கல்வி நிறுவனம் போட்ட ஆணை இது. தற்காலிகமாக’ என்று போட்டிருந்திருக் கலாம். மானியம் இருக்கும் வரையிலும் என்று போட்ட தால் இப்பதவி உரிமைக் கட்டுப்பாடுடைய பதவி (Temure post) என்பது தெளிவாகிறது’’ என்பதாக. இதை மறுத்திப் பேச அரசு வழக்குரைஞருக்கு வழி தெரிய வில்லை . இதனால்தான் அரசு வழக்குரைஞர் வாய்தா வாங்கிக் கொண்டார். திருப்பதி பதிவாளர் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கியது. ஆனால் நான் ஏதோ ஒரு காரணத்திற்காக தில்லி பல்கலைக் கழக மானிய ஆணையத்திற்கு எழுதிய என் கடிதத்தின் நகல் கிடைத்தது. துணைப்பதிவாளர் டாக்டர் அஞ்சனப்பாதான் இந்த நகலைத் தேடி எடுத்தார் என்பது என் ஊகம். இவர் என் இல்லத்தருகில் மற்றொரு இல்லத்தில் குடியிருந்தார். வழக்கு பற்றி ஏதோ பேச்சு வந்த போது நீங்கள் வெற்றியடைவீர்கள் என்பது ஐயமே' என்று சொன்னதிலிருந்து இந்த ஊகம் எழுந்தது. கம்பராமாயணக் கருத்தரங்குக்கு அனுமதிக்கப் பெற்ற தொகை ரூ 4000/- முதல் தவணையாகக் கிடைத்தது. கருத்தரங்கு முடிந்து அதிகமாகச் செலவழித்த தொகை ரூ 1700/- சொச்சம் உடனே தருமாறு எழுதினேன். விவரமாக செலவுகளைக் காட்டிப் பில்கள் அனுப்பியிருந் தேன். இதற்கு முன்னர் பல்கலைக் கழகம் உடனே வழங்கும், சிலப்பதிகாரக் கருத்தரங்கிற்கு இப்படித்தான் வழங்கியது. இப்பொழுது தாங்கள் ஓய்வு பெறுவதால் உடனே வழங்குவதற்கில்லை. பல்கலைக்கழகமானிய ஆணையம் தந்த பிறகுதான் தரமுடியும்' என்று பதில் எழுதிவிட்டனர். காரணம் பொருந்தாதது என்பதை மூடனுக்கும் தெளிவாகும்.