பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/674

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 நினைவுக் குமிழிகள்.4 உடனே நான் பதிவாளர் மூலமாக பல்கலைக்கழக ஆணையத்திற்கே எழுதினேன். நான் செப்டம்பரில் ஒய்வு பெற நேரிடக் கூடுமாதலால் உடனே இரண்டாவது தவணைக் குரிய தொகையை அனுப்பவேண்டியது” என்று எழுதியிருந்தேன்-பொதுவாக நான் இப்படி (ஒருவர் மூலமாக) எழுதும் போது அதிகமாக ஒரு நகலை யும் கொடுப்பது வழக்கம்: ஒன்று தில்லிக்கு அனுப்பப் பெற்றாலும் மற்றொன்று அலுவலகத்தில் இருக்கட்டும் என்று இவ்வாறு செய்வது வழக்கம். இல்லையேல் இதை நகல் எடுப்பர் அல்லது எடுக்காது போவர். நான் தில்லிக்கு எழுதிய கடிதத்தின் நகலை ஐதரபாத்திற்கு அனுப்ப, அதை அரசு வழக்குரைஞர் மன்றத்தில் சமர்ப்பித்து பணி வகிக்கிறவரே (Incumbent) ஒய்வு பெறுகிறதாகக் கூறும்பொழுது இது உரிமைக் கட்டுப் பாடுடைய பதவி அன்று என்று அடித்துப் பேசவே நீதி பதியின் மனம் மாறியது; ரிட் வழக்கைத் தள்ளுபடி செய்தார்; என் வழக்கு தோற்றது. இந்த வழக்கில் என் கடிதமே என்னைப் பாதித்ததால் "இனி திருப்பதியில் தங்க வேண்டா, ஒய்வு பெற்றுப் போய் விடு' என்று ஏழுமலை அப்பனே சொன்னதாகக் கருதி மன அமைதியானேன். தவிர, இன்னும் திருப்பதியில் தங்கவேண்டும் என்ற: ஆசையால் வழக்கு தொடரவில்லையாதலால் தோல்வி என்னைப் பாதிக்க வில்லை. அக்டோபர் 25 முதல் (1977) என்னைப் பல்கலைக் கழகம் பதவியிலிருந்து கழற்றி லிட்டு விட்டது. இனி" நான் என் பொறுப்பைத் துறையிலுள்ள ஒருவரிடம் ஒப்படைக்கவேண்டும். நான் துறைக்கு வந்து நேரில் தாமோதரனிடம் ஒப்படைக்க விரும்பவில்லை; வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறு நினைத்தேன். முதல்வரிடமோ அல்லது இன்னொரு துணைப் பேராசிரியர் டாக்டர் P. செளரிராஜனிடம் பொறுப்பைத் தர எண்ணினேன். ஆனால் பல்கலைக்