பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/675

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்வு பெற்றதும் சென்னை வருகையும் 54 f. கழகம் நேரில் துறைக்கு வரவேண்டும் (தாமோதரனின் து ணடுதலால்) என்று வற்புறுத்தியது. ஆனால் பொறுப்பைத் திரு செளரிராஜனிடம் ஒப்படைத்ததாகக் கடிதம் அனுப்பி, கடிதத்தின் நகலை முதல்வருக்கு அனுப்பியதாக நினைவு ; துறைக்குப் போகவில்லை. குறையிருப்பின் அதை நான் நிவர்த்தி செய்வதாக எழுதிவிட்டேன். - P. F. கணக்கு முடிப்பதற்கு யாதொரு பாக்கியும் இல்லை என்று (1) துறையிலிருந்து ஒரு சான்றிதழும், (2) நூலகத்தாரிடமிருந்து ஒரு சான்றிதழும் அனுப்ப வேண்டும். டாக்டர் தாமோதரன் (1) வகுப்பு நூலகத் திலிருந்து சில நூல்கள் என் பெயரில் இருப்பதாகவும் (2) சில நூல்கள் நான் தலைமைப் பதவியிலிருந்தபோது சில மாணவர்கள் பேரில் தந்த நூல்களை என் பொறுப்பில் வாங்கித் தரவேண்டும் என்றும் கடிதம் எழுதியதுடன் நூலகருக்கும் சான்றிதழ் வழங்கக் கூடாது என்று தெரி வித்துக் கடிதம் அனுப்பினார். உண்மையில் என் பேரில் சில நூல்கள் இருப்பினும் நூல்கள் என்னிடம் இல்லை. அவற்றிற்குரிய விலையைச் செளரிராஜன் கட்டிவிட்டு சான்றிதழ் வழங்கலாம் என்று சொல்லிவிட்டார். மாணவர்களிடமிருந்து நூல்களைத் திரும்பப் பெறுவது சட்டப்படி இப்போது துறைத் தலைவராக இருப்பவரின் பொறுப்பு என்று எழுதிவிட்டு அதன் நகலை நூலகருக்கும் அனுப்பினேன். ஒன்றிரண்டு ஆண்டுகளில் (1980-என்ப தாக நினைவு) தாமோதரன் மாரடைப்பால் காலமாகி விட்டார்.அவருடைய நூல்களைப் பல்கலைக்கழக நூலகத் திற்கு அவர் குடும்பம் ஒப்படைத்தபோது என் பேரி விருப்பதாகக் காட்டிய நூல்கள் அவர் வீட்டி விருந்தன என்று செளரிராசன் சொன்னபோது எனக்கு ஒரே வியப்பு. நான் பதவியிலிருந்தபோது தான் வகுப்பிற்குச் சென்றிருக்கும் சமயம் பார்த்து என் மேசை 1யின்மீது இருக்கும் நூல்களை ஒவ்வொன்றாக எடுத்துப் நி-41