பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/676

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.42 நினைவுக் குமிழிகள்-4 போயிருப்பதைத் தவிர வேறுவகையில் நூல்கள் தாமாக நகர்ந்து அவர் இல்லத்திற்குப் போகா. இப்படியும் நூல்களைக் களவாடும் ஆசிரியர்கள் பல்கலைக்கழகத்தில் இருக்கின்றனர் என்பது என்னை வியக்க வைக்கின்றது. ஒய்வு பெற்ற பிறகு சுமார் மூன்று மாதகாலம் (1977 அக்டோபர் 25 நாள் முதல் 1978-சனவரி 14 நாள் வரை) பல்கலைக்கழக அனுமதியுடன் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஆசிரியர் குடியிருப்பிலேயே இருந்து வந்தேன். காரணம், சென்னையில் வாடகை வீடு அமையவில்லை: திருப்பதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யில் பணியாற்றி வந்த என் மூத்த மகன் இராமலிங்கத் திற்குச் சென்னைக்கு மாற்றலாகும் ஆணை கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. முன்னதை என் இரண்டாவது சம்பந்தி M. R. துரைசாமி செய்வித்தார். பின்னதை நான் சென்னை வந்து உரியவர்களைப் பார்த்துச் செய்தேன். இறையருளால் இரண்டும் ஏக காலத்தில் நடை பெற்றது. பொங்கல் உண்ட பிறகு (தமிழர் திருநாள்) சென்னைக்குப் புறப்படுவதென்பது உறுதி யாயிற்று. சாமான் வண்டி (Lorry) யில் சாமான்களை ஏற்றிச் செல்லவும் முடிவு செய்தோம். எங்கள் மூத்த மகனுக்கு அப்பொழுதும் ஆறு மாதக் கைக் குழந்தையும் (பெண் குழந்தை) இருந்தது. பொங்கலுக்கு முதல் நாள் (போகியன்று) திரு துரைசாமிரெட்டியார் கார் அனுப்பியிருந்தார்; அவர் முதல் மகன் அரங்கராசன் B. E. வண்டியை ஒட்டிக் கொண்டு வந்திருந்தார். வேலூரிலிருந்து முதல் சம்பந்தி K.C. குப்புசாமிரெட்டியாரும் திருப்பதி வந்திருந்தார். போகிப் பண்டிகையன்று ஏ ழு ம ைல ய ைன ச் சேவித்து அவனிடம் விடைபெற்றுப் போகவேண்டும் 1, திரு. குப்புசாமி ரெட்டியார் 1985-ல் திருநாடு அலங்கரித்து விட்டார்.