பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/677

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்வு பெற்றதும் சென்னை வருகையும் 643 என்பது என் விருப்பம். 17-ஆண்டுகள் அவன் அடிவாரத் தில் வாழ்ந்தேன். என் மக்களின் கல்வி நன்கு முடிந்தது: இருவரின் திருமணமும் சிறப்பாக முடிந்தது. எல்லோரும் உடல் நலத்துடனும் மன வளத்துடனும் இருக்கின்றோம். ஏழுமலையான் திருவருள்தான் இதற்கு முக்கியகாரணம் என்பதை நான் நன்கு உணர்ந்தவன். போகியன்று உணவை முடித்துக் கொண்டு நான், என் மனைவி, மனைவியருடன் என் மக்கள், கைக்குழந்தை, வேலூர் சம்பந்தி-இவர்களுடன் காரிலேயே திருமலை சென்று ஏழுமலையானைச் சேவித்தோம்; அவனிடம் பிரியாவிடை பெற்றோம். வேலூர் சம்பந்தியின் உதவியால் தரிசனம் எளிதாகக் கிடைத்தது. மாலை 6-மணிக்கு வீடு திரும்பி விட்டோம். பொங்கலன்று காலை 8-மணிக்கே லாரி வந்தது. சாமான்களை ஏற்றுவதில் என் பிள்ளைகளுடன் வேறு இரண்டு அபிமானப் பிள்ளைகளும்-ஆராய்ச்சி மாணவர் கள் டாக்டர் தேவ சங்கீதம் (அப்போது விரிவுரையாளர்), திரு. N. கடிகாசலம்-துணைசெய்தனர். சாமான்களுடன் என் இளைய மகன் டாக்டர் இராமகிருஷ்ணனும், மற்றொரு அபிமான புத்திரன் டாக்டர் தேவசங்கீதமும் லாரியில் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தோம். ஏனையோர் காரில் செல்வதென்று உறுதியாயிற்று. இரண்டு நாட்கள் முன்னதாகவே அருகிலுள்ள 10 வீட்டு நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் விடைபெற்றுக் கொண்டோம். நான்கு நாட்கள் முன்னதாகவே ஒரு நாள் டாக்டர் Y. கிருஷ்ணா ரெட்டியும் (வேதியியல்) மற்றொரு நாள்டாக்டர்V.W. சாஸ்திரியும்(கணிதம்)எங்கள் அனைவருக்கும் விருந்தளித்தனர். பிற்பகல் 2-மணிக்கு உதயசூரியன் திசையிலுள்ளசென்னையை நோக்கி எங்கள் கார் சென்றது: அரைமணிக்கு முன்னர் லாரியும் சென்றது. "கெட்டும் பட்டணம் சேர்’ என்பது பழமொழி. கெடாமலேயே-ஏழுமலையான்திருவருளால்-பட்டணம்