பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நினைவுக் குமிழிகள் 4 (அடிமைத்தன்மை) நமக்குப் போதும் என்றெண்ணி முடித் தாரல்லர் என்பது இதன் பொருள். இதனையும் சிந்தித்து உணரவேண்டும். இந்தத் திருத்தலப் பயணிகள் தூய்மையற்றவர்கள். சுகாதார விதிகளைக் காற்றிலே பறக்க விட்டவர்கள் என்பதற்கு நான் நேரில் கண்ட நிகழ்ச்சியே சான்றாகக் கொள்ளலாம். ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் இவர்கள் பத்துப் பதினைந்து பேர்களாகச் சேர்ந்து பயணம் செய்வார்கள்; இவர்களில் குழந்தைகளும் சிறுவர்களும் அடங்குவர். ஒரு கும்பல் பெரிய துப்பட்டியில் இரண்டு மூன்று வேளைக்குப் போது மான அளவு புளிச்சோறு மூட்டையாகக் கட்டிக்கொண்டு வரும். இதனை உண்பதற்கு சிறிய இலைக்கட்டு கொண்டு வருவதில்லை. இரயிலடி மேடையில் சோற்று மூட்டையை அவிழ்த்து விரித்து வைத்துக் கொள்வார்கள். சோற்றுக் குவியலைச் சுற்றிலும் அனைவரும் அமர்ந்து கொண்டு வைக்கோல் குவியலைச் சுற்றி நின்று கொண்டு மாடுகள் வைக்கோலைத் தின்பது போன்று உணவினைத் தம் கை களால் பிசைந்து பிசைந்து பிடியாக்கி உண்பார்கள். குழந்தைகளும் சிறுவர்களும் சோற்றுக்குவியலை உழப்பு வார்கள். குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்ததும் மயக்குறு மக்கள்' அல்லர் இவர்கள். இஃது இல்லத்தில் சிறுவர்கள் தனித் தனிக் கலத்தில் இடப்பெற்றுள்ள சோற்றை உண்ணும் முறையை விளக்குவது. இச்சிறுவர்களும் குழந்தைகளும் இவ்வாறுதான் செய்தனர் என்று கொள்ளல் தவறு. இல்லத்தில் உள்ள குழந்தைகள் அந்த வேளைக்குரிய 7. புறம்-188.