பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நினைவுக் குமிழிகள்-4 வாழ்க்கையில் விநோதமான செயல்கள் நடைபெறும் நான் செல்வாக்குடன் திகழும் பல்கலைக்கழகத்திற்கு என் மக்கள் வரும்போது என் பெயரைச் சொல்லி இன்னார் மக்கள் என்று அறிமுகம் ஆவர். என் மகன் இராம. கிருஷ்ணன் மருத்துவக் கல்லூரியில் சிறந்த மாணக்கனா தலால் எல்லோரும் அவனை நன்கு அறிந்திருந்தனர். தான் அங்குப் போனால் இவர் டாக்டர் இராமகிருஷ்ணனின் தந்தையார் என்று அறிமுகம் ஆவேன். இங்ங்ணம் தந்தை பெயர் சொல்வி மகன் அறிமுகமாவதும், மகன் பெயர் சொல்லித் தந்தை அறிமுகமாவதும் எங்கும் இன்றும்ஏன்? என்றுமே- நாம் காணும் நிகழ்ச்சிகளாகும். ஒரு குடும்பத்தில் மகன் நன்கு கற்றுத் தன்னுடைய குணச் சிறப்பாலும் அறிவு நலத்தாலும் திகழ்வானாயின, அவன் பெற்றோர்க்கு இனிமையைத் தருபவனாக அமைவான். உலகத்தினர் இவர்கள் பெறும் இனிமையை விடப் பன்மடங்கு இனிமை பெறுவர். பிறர் கல்வியைக் கண்டு பொறாமைப் படுபவரும் தம் மைந்தன் கல்வியின் உயர்தரத்தைக் கண்டுகளிப்பர்; கல்வியறிவில்லாதவர்களும் தம் மைந்தன் உயர்கல்வியைக் கற்பிக்கப் பெருமுயற்சி எடுக்கின்றனர். இதனைத்தான் வள்ளுவர் பெருமான். தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.” என்று கூறிப் போந்தார் என்பது ஈண்டு உளங் கொள்ளத் தக்கது. ஒருநாள் திரு. இராமய்யா என் அறைக்கே வந்து விட்டார். சிறிய அறை. பத்து அடி நீளம் எட்டு அடி அகலம்தான் இருக்கும், பாயும் தலையனையும்தான் படுப்பதற்கு உட்காருவதும் இந்தப் பாயிலேதான் மூன்றாண்டுகள் கழித்து தேக்கு மரத்தால் ஆன நாடாக் கட்டில் ஒன்று தயார் செய்து கொண்டேன். ஆராய்ச்சி 1 குறள்-68