பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமய்யாவும் பாலசுந்தர நாயக்கரும் 39 செய்து வந்ததால் நூல் தொகையும் பெருகியது. அவற்றை வைத்துக் கொள்வதற்கு மரத்தாலான இரண்டு நிலைத் தட்டுகளையும் (Sheives) செய்து கொண்டேன். திரு. இராமய்யா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்; பதிவு பெற்ற பட்டதாரிகளின் தொகுதி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் என் அறைக்கே வந்தார். பாயில்தான் இருக்கவைத்தேன். அப்போது காலாண்டுத் தேர்வு விடுமுறையில் காரைக்குடி சென்று திரும்பிய சமயம். காரைக்குடி சென்று திரும்பியபோதெல் லாம் பாசிப்பருப்பு லட்டு கொண்டுவருவ துண்டு. திரு. இராமய்யா அறைக்கு வந்த பொழுது இரண்டு லட்டு களைத் தந்து உபசரித்தேன்; மண் கூசாவிலிருந்த தண்ணிரைப் பருகக் கொடுத்தேன். கிட்டத்தட்ட ஒரு சந்நியாசி நிலைதான். ஆறு அறிவியல் நூல்களை எழுதினேன். ஒவ்வொரு நூலுக்கும் குறைந்தது ஐம்பது படங்களாவது தேவைப்படும்; அவற்றைத் தேர்ந் தெடுப்பதில் அதிகக் காலம் செலவாகும்; இந்த அறையி லிருந்து கொண்டுதான் பன்னிரண்டு அறிவியல் கட்டுரை களும் வேறு பல இலக்கியக்கட்டுரைகளும் எழுதப் பெற்றன. இலக்கியக் கட்டுரைகள் பெரும்பாலும் நான் ஆய்ந்து வந்த நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலேயே அமைந்தன. இவை யாவும் பல பெரியார்களின் மணிவிழா மலர், திருக்கோயில் குட முழுக்கு விழா மலர், பல சங்கங் களின் ஆண்டு விழா மலர் போன்றவற்றிற்கு எழுதப் பெற்றவை. திரு. இராமய்யா என்னுடன் அன்புடன்தான் பழகி னார். நான் கல்வி கற்ற பள்ளிகள், கல்லூரிகள், 2 இவை அறிவியல் விருந்து' (1967) என்ற நூல் வடிவம் பெற்றன. 3. இவையே சிலநோக்கில் நாலாயிரம் (1983) என்ற தலைப்பில் நூல்வடிவம் பெற்றன.