பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமய்யாவும் பாலசுந்தர நாயக்கரும் 41 டாக்டர் மு. வரதாசன் தொடக்கத்தில்வட்ட அலுவலகத் தில் எழுத்தராக இருந்தவர்தான்: மதுரைப் பல்கலைக் கழகப் போாசிரியர் டாக்டர் மொ. அ. துரையரங்கசுவாமி @sol–ğlso av eggstflugrm 5$ (Secondary grade teacher / 36ãr பணியைத் தொடங்கினவர்தான். கல்வெட்டு ஆராய்ச்சி யிலும் இலக்கிய வரலாற்று ஆய்விலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சிறந்து விளங்கிய திரு. சதாசிவ பண்டாரத்தாரும் கும்பகோணத்தில் ஒர் உயர்நிலைப் பள்ளி யில் பணியாற்றிய ஒரு சாதாரணத் தமிழாசிரியர்தான். இன்றும் எத்தனையோ தமிழ்ப்பேராசிரியர்கள் தம் உழைப்பால் உயர்ந்து பல்கலைக் கழகத்தில் நுழைந்து பெரும் பணியாற்றியவர்கள். இவர்களில் பெரும்பாலோர் எம். ஏ. கூட படிக்கவில்லை; வித்துவான் பட்டத்துடன் நின்றவர்கள். ஆதலால் உயர்நிலைப் பள்ளியிலிருந்து பல்கலைக் கழகத்திற்கு வந்தவர்கள் தாழ்வானவர்கள் என்று நினைப்பது தவறு' என்று எடுத்துக்காட்டி விளக்கி னேன். தவிர, 'நான் ஒன்பது ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியனாகப் பணியாற்றியவன். நானே பள்ளியைப் புதிதாகத் தொடங்கி பெரிதாக வளர்த்தவன். காரைக்குடியில் புதிதாகத் தொடங்கிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பத்து ஆண்டுகள் பேராசிரிய னாகப் பணியாற்றிய பிறகுதான் இங்கு வந்தேன். பெரிய தோர் புகழ் மிக்க கல்லூரியில் பேராசிரியனாகப் பணியாற்றி முதல்வராகும் வாய்ப்பையும் துறந்து சாதாரண விரிவுரையாளர் பதவிக்கு வந்துள்ளேன். திங்கள்தோறும் ரூ 1531 = இழப்பிலும் வந்துள்ளேன். மேனாடுகளிலிருந்து சமயப்பணிக்காக நம் நாடு வந்திருக் கும் சமயப் பாதிரியார்போல் தமிழ் வளர்ப்பதற்காகவே தியாகம் செய்து வந்துள்ளேன். பிள்ளைகளின் தமிழ்க் கல்வி திருப்பதியில் உயர்நிலைப்பள்ளி மட்டத்தில் இல்லாததால் குடும்பத்தையும் விட்டு வந்துள்ளேன்’’ என்று மேலும் தொடர்ந்து பேசினேன்.