பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நினைவுக் குமிழிகள்-4 கிடைக்கும் மகப்பேறு போல்'தான் ஏற்படுகின்றது. மலையளவு முயற்சியால் கடுகளவு பயன் விளைகின்றது; ஊழ் (தெய்வம்) இல்லாமையால் மெய்வருத்தக் கூலி தரும்' என்பது போலாகின்றது. உண்ணவேண்டிய அளவுக்குக் கூலி கிடைக்கின்றது. அதற்கும் குந்தகம் விளைவித்தால் 'உண்மை உழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து வேலை நிறுத்தம் செய்வார்கள் என்று அஞ்சி தான் இறைவன் இதில் தலையிடுவதில்லை போலும். கோயிலுக்குப் போவதில்லை; இறைவன் புகழ் பாடுவ தில்லை: பூசனை புரிவதில்லை; விழா எடுப்பதில்லை...' இப்படி பக்தர்கள் செய்தால் நம் நிலை என்னாகும்?" என்று இறைவனும் அஞ்சுகின்றான் போலும்! என்னை உயர் நிலைப் பள்ளியிலிருந்து வந்தவன்" என்ற வதந்தியைப் பரப்பியவர் யாராயிருக்கலாம் என்று என்று மனம் சிந்திக்கத் தொடங்கியது. நான் திருப்திக்கு விண்ணப்பித்ததை என் ஞானத் தந்தை' போன்ற பன் மொழிப் புலவர் வே. வேங்கடராஜுலுரெட்டியாரிடம் மட்டிலும் தெரிவித்திருந்தேன். அவர் சொன்னார்: 'திருப்பதியில் கீழ்த்திசைக் கல்லூரில் திரு கே. பாலசுந்தர காயக்கர் பணிபுரிகின்றார். அவர் முயல்வார். முயன்றால் அவருக்குத்தான் கிடைக்கும்’ என்றார். நானும் திரு. நாய்க்கரும் ஒருவரையொருவர் பார்த்ததுமில்லை. விரிவுரையாளர் பதவிக்குச் சென்னையில் ஆர்ம்சாலை யிலுள்ள துணைவேந்தர் நாயுடு இல்லத்தில் பேட்டி நடை பெற்ற பொழுது 18 பேர் பேட்டிக்கு வந்திருந்தனர். இப்பொழுது சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராகத் திகழும் டாக்டர் சி. பாலசுப்பிரமணியம்", 5. அப்போது பச்சையப்பன் கல்லூரியில் பயிற்சி யளிப்பவராக Tutor)ப் பணியாற்றிக் கொண் டிருந்தார். இன்று (1990) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக இருப்பவர்.