பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龛& நினைவுக் குமிழிகள்-4 துணைவேந்தரிடம் சொன்னமையால் அவரும் இவருக்கு இங்கு வர ஒரு வாய்ப்பு நல்கினார். பேராசிரியர் டாக்டர் நயினார் அரபுமொழியில் வல்லுநர். பேராசிரியர் நயினார் பழநியைச்சார்ந்தவா. பழநியில் இவருக்கு நிலபுலங்கள் உண்டு. இவர் பல்லாண்டுகள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் அறபு மொழிப் பேராசிரியராகப் பணியாற்றிப் புகழ்பெற்றவர். ஆகவே இவர் திறமையை நன்கு அறிந்த துணைவேந்தர் நாயுடு அவர்கள் இவரைத் திருப்பதிக்குக் கொணர்ந்தது வியப் பொன்றுமில்லை. பேராசிரியர் நயினாரை நானும் நன்கறிவேன். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த். துறையைச்சார்ந்த பன்மொழிப் புலவர் திரு. வே. வேங்கட ராஜுலு ரெட்டியார் அவர்கட்கு மிகவும் நெருக்கமானவர். பேராசிரியர் நயினார் அவர்கள் தமிழிலும் புலமையுடைய வராதலால் தமிழ் இருவரையும் பிணைத்து வைத்தது. என்று கருதுகின்றேன். சென்னையிலிருந்தபோது சீதக் காதி கொண்டி நாடகம்' என்ற நூலொன்றை ஆராய்ச்சி முகவுரையுடன் பதிப்பித்திருந்தார். பன்மொழிப் புலவர் ரெட்டியார் மூலம் இவரிடம் எனக்கு நட்பு ஏற்பட்டது. அக்காலத்தில் (1940-50) நயினார் சீறாப் புராணத்தை நல்ல முறையில் பதிப்பிக்க முயற்சி செய்து கொண் டிருந்ததை நான் நன்கு அறிவேன். செய்யாறு முதலிய இடங்களிலுள்ள கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரிய ராகப் பணியாற்றிய முத்து.சு.மாணிக்கவாசக முதலியாரை' பன்மொழிப் புலவர் ரெட்டியாரின் பரிந்துரையால் டாக்டர் நயினார் அவர்கள் சீறாப் புராணத்தைப் பதிப்பிக்கும் திட்டத்தில் ஆய்வு உதவியாளராகச் 1. இவர் பின்னர் துறவறத்தைக் கடைப்பிடித்து காஞ்சி முதலியார் மடத்தில் ஞானப்பிரகாச சுவாமிகள் என்ற பெயரில் மடத்துத்தலைவரா 6 grrrrr, -