பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் உசேன் நயினார் 49 (Research Assistant) சேர்த்துக் கொண்டார். பேராசிரியர் நயினார் அவர்கள் மிக்க செல்வாக்குடன் திகழ்ந்தவர். துணைவேந்தர் டாக்டர் இலக் குமணசாமி முதலியாரின் ஆதரவு பெற்றவர்; அவருடன் நெருங்கிப் பழகுபவர். பேராசிரியர் நயினார் அவர்களை 1950க்கு மேல் சந்திக்கும் வாய்ப்பு இல்லை. பல்கலைக் கழகத்தில் நீண்ட விடுப்பு பெற்று (பின்னர் பேராசிரியர் பதவியையும் துறந்து) இந்தோனேஷிவா அரசின் கீழ்ப் பெரிய ஊதியத்தில் பெரிய பதவி கிடைத்துப் போய் விட்டதை அறிந்தேன். அங்கும் ஒய்வு பெற்று தில்லியில் பணி யாற்றினபொழுதுதான் துணைவேந்தர் நாயுடுவைச் சந்தித்து அவர் ஆதரவின் பேரில் திருப்பதி வந்து சேர்ந்தார். இவர் வந்த நாள் தொட்டு இவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது; தனிமையாகத் தத்தளித்துக் கொண்டிருந்த எனக்கு இவர் வந்தமை மட்டற்ற மகிழ்ச்சி அளித்தது. இவர் இருந்தவரை நான் சந்தித்து பேசாத நாளே இல்லை. தனிமையாகவே இருந்தார். வந்த மறு வருடமே கடுமையான நோயால் தாக்கப் பெற்றார். சென்னைக்கு வந்து பல் வேறு மருத்துவ சோதனைகட்குத் தன்னை உட்படுத்திக் கொண்டார்; பலன் இல்லை. நோய் இன்னதெனக் கண்டறிய முடியவில்லை. உடல் மெலிந்து கொண்டே வந்தது; பசியே இல்லை என்பதும், செரிமானம் இல்லை என்பதும் இவர் அடிக்கடிச் சொன்ன அறிகுறிகள். ஆனால் எந்த மருத்துவராலும் நோய் இன்னதென்பதை அறிந்து சொல்ல முடியவில்லை. என் அரிய நண்பர் டாக்டர் கே. சி. வரதாச்சாரியார் (தத்துவத்துறைத் துணைப் பேராசிரியர்) ஒரு சிறந்த ஓ பியோபதி மருத்துவர்; அவராலும் நோய் இன்ன தென்பதை அறியக் கூடவில்லை. மலம் கீல் நிறத்தில் போகிறது என்பதை யறிந்த பல் கழைக் கழக வளாக மருத்துவர் டாக்டர் வீரபத்ரய்யா கல்லீரல் புற்று நோய்' என்பதாக அறுதியிட்டார். வேறு நி-4