பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் உசேன் நயினார் 等五 மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே." என்ற பெரியாழ்வார் பாசுரத்தை எடுத்துக் காட்டி முதலடியில் அவரது கவனத்தை ஈர்த்தேன். பாசுரத்தைச் சுவைத்து மகிழ்ந்தார். நயினார் மறைந்தது டாக்டர் அகமதுக்கு தலைவலி விட்டது போலாயிற்று. அடுத்த ஆண்டு அவர் துணைப் பேராசிரியரானார். இதனால் இவருக்குத் தலைக்கணம்' அதிகமாயிற்று: தலைகால் தெரியாமல் ஆடத் தொடங் கினார். ஒரு சமயம் நான் ஒரு டெ ரிய அறைக்குத் தள்ளப் பெற்றேன். அறையின் வாயிலின் இடப்பக்கத்தில்தான் ஒரு மின் விசிறி பொருத்தப் பெற்றிருந்தது. அதற்கு நேராக என் இருக்கையை அமைத்துக் கொண்டு வாயிற்படியருகில் இரும்பு பீரோவை நிறுத்தி மறைவிட மாக்கிக் கொண்டேன். வகுப்புக் கென்று தனி அறை இல்லாமையால் என் அறைக்கே மாணாக்கர்கள் வந்து விடுவார்கள். இவர்கள் யாவரும் இளங்கலைவகுப்பைச் சார்ந்த தமிழ் பயிலும் மாணாக்கர்கள். நான் கற்பித்த பத்தாண்டுக் காலத்திலும் எந்த வருடமும் மூவருக்கு மேல் சேர்ந்ததில்லை. ஒராண்டு மட்டிலும் நால்வர் சேர்ந்த தாக நினைவு. பெரும்பாலும் ஒரு மாணாக்கர் அல்லது மாணாக்கிதான் இருப்பது மரபாகிவிட்டது. 1972முதல் இளங்கலை வகுப்பு பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கப் பெற்றது. இளங்கலை வகுப்பு இருந்த வரையிலும் எனக்கு உற்காசம் இல்லை; காரணம, அதிக எண்ணிக்கையில் 2. பெரியாழ். திரு. 4.5 : ே