பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あ2 நினைவுக் குமிழிகள்.4 மாணாக்கர் இல்லாமையால் கற்பிப்பதில் அதிக வேலை இல்லை. மிகவும் துன்பப் பட்டேன். ஒரு மாணாக்கர் வகுப்பில் இருக்கும்போது அவர் சரியாக வருவதில்லை: அப்படி வந்தாலும் தமிழ்ப் படிப்பில் உற்சாகம் காட்டுவ தில்லை. இரண்டு ஆண்டுகள் தனித் தனியாக இரு மாணாக்கியர் இருந்தனர்; அதாவது முதலாண்டில் ஒருவரும் இரண்டாம் ஆண்டில் ஒருவருமாக இருந்தனர். ஒருவர் உள்ளூர் வாசி; மற்றொருவர் மதனபள்ளி பக்க மிருந்து வந்து மகளிர் உணவு விடுதியில் தங்கிப் படித்தார். இருவரும் படிப்பில் கண்ணும் கருத்துமாக இருந்து மிக நன்றாகப்படித்து முதல் வகுப்பு மதிப் பெண் பெற்றனர்; இதனால் என் கவனம் எழுத்துப்பணியில் ஆழ்ந்தது. சிறுவர்க்காகவும் வளர்ந்தவர்கட்காகவும் அறிவியல் நூல்களை எழுதினேன். கல்லூரியில் எழுத முடியாது; எழுதுவதற்கேற்ற சூழ்நிலையும் இல்லை; மனமும் இதற்கு, ஒருப்படவில்லை. வகுப்பில்லாத நேரங்களில் நூலகத்தில் ஏதாவது படிப்பதில் காலம் கழிந்தது. நூலகத்தில் பணி யாற்றிய என் அருமை நண்பர் திரு. எம். ஆர். சந்திரன் என்பவரின் துணைகொண்டே அலங்கோலமாகச் சிதறிக் கிடந்த தமிழ் நூல் களை வகைப்படுத்தினேன்; நாடோறும் 25 நூல்கள் தாம் வகைப்படுத்த முடிந்தன. சில ஆயிரம் நூல்கள் இவ்வாறு என்னால் வகைப்படுத்தப் பெற்றன. 1 9 59–60 દ્રો) இரண்டாவது ஆண்டு முடித்துக் கொண்டு மூன்றாம் ஆண்டு இளங்கலை வகுப்பைச் சார்ந்தவன் வேங்கடேசன் என்ற மாணாக்கன். கல்லூரி யில் அவனை அறியாதவர்களே இரார். பம்பரம்போல் சு ன்று வருவான்; சுறுசுறுப்பாக இயங்கி வருபவன். ந - ன் பணியில் சேர்ந்த ஒரு சில நாட்களில் என்னைச் சந்தித்துத் தமிழ்க் கூட்டங்கள் நடத்தவேண்டு மென்று தெரிவித்தான். உருக்குமிணி என்ற ஒரே மாணாக்கி தானே வகுப்பில் உள்ளாள்? ஒருவரை வ்ைத்துக்கொண்டு.