பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் உசேன் நயினார் 53 _ என்ன செய்வது? தனிமரம் தோப்பாகுமா?' என்றேன். தான் ஒல்லும் வகையெல்லாம் பணி புரிவதாக உறுதி யளித்தான். அவன் இருந்த மூன்றாண்டுகள் (எம். ரயில் இரண்டாண்டுகள்) ஒரே மாணவி அல்லது மாணவனைக் கொண்ட தமிழ்த் துறை கலகலப்பாக இயங்கியது. இந்தித் துறை தெலுங்குத் துறை மாணாக்கர்களும் ஆசிரியர்களும் மூக்கின் மேல் விரலை வைத்து வியக்குமாறு ஆண்டொன்றுக்கு ஆறு கூட்டங்களுக்குக் குறையாமல் கூட்டிவிடுவான். ஒவ்வொரு கூட்டத்திற்கும் பத்துரூபாய் கேட்பான்; தந்து விடுவேன். வேறு துறைகளிலுள்ள ஒரு சில ஆசிரியர்களிடமும் ஏதாவது சிறு தொகை பெறுவான் போலும்! மாலைகள், குளிர் பானங்கள் முதலிய வாங்கு வதற்குப் பணம் வேண்டுமல்லவா? அக்காலத்தில் தமிழறிந்த பிற துறையாசிரியர்கள் பரவலாக இருந்தனர்; மாணாக்கர்களும் பல துறைகளில் பயின்று வந்தனர். பெரும்பாலும் இவர்கள் நகரி, புத்துார், ஏகரம்பரக்குப்பம், சித்துனர், கார்வேட்டி நகர் முதலிய ஊர்களிலிருந்து (இவ்வூர்களில் பெரும்பாலும் இருப் பவர்கள் தமிழர்களே) வந்து படிப்பவர்கள். இவர்களை யெல்லாம் நேரில் சந்தித்து கூட்டத்திற்குக் கொண்டு வந்து விடுவான் , ஆசிரியர்களில் திரு. சீநிவாசலு {விலங்கியல் துறை) திரு. டி.இ. வீரராகவன், டாக்டர் கே.சி. வரதாச்சாரி (தத்துவத் துறை), டாக்டர் இராமாநுஜம், திரு. வி.எம். ரெட்டி (வரலாற்றுத் துறை), திரு. கே. கமலநாதன் (அரசியல் துறை), டாக்டர் வி. வரதாச்சாரியார் திரு. டி. கே. கோபாலசாமி அய்யங்கார், டாக்டர் சிரீகிருஷ்ணசர்மா (வடமொழித் துறை), திரு. ஜி.என். ரெட்டி, திரு டி.கே. கோதண்ட ராமப்யா, திரு. கந்தப்ப செட்டி (தெலுங்குத் துறை), டாக்டர் W. R. கிருஷ்ணன் (வேதியியல் துறை), டாக்டர் எஸ். இராமச்சந்திர ராவ் (இயற்பியல் துறை), டாக்டர் முகம்மது உசேன் நயினார் (அறபு மொழித்துறை)இவர்கள்