பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நினைவுக் குமிழிகள்-இ பல்கலைக்கழகத்திவிருப்பவர்கள். திரு. ஜி. லீலாகிருஷ்ணன் (தாவர இயல்), திரு. ஏ. நடராசன் (இயற்பியல்) இவர்கள் தேவஸ்தானம் நடத்தும் கலைக் கல்லூரியைச் சேர்ந்த, வர்கள். ஒவ்வொரு கூட்டத்திற்கும் இவர்களில் பெரும் பாலோரை எப்படியோ கொண்டுவந்து சேர்த்துவிடுவான். ஒவ்வொரு கூட்டத்திலும் முப்பது பேர்களுக்குக் குறையாமல் கூடி விடுவார்கள். என்னை வரவேற்புரை நிகழ்த்துமாறு பணிப்பான்; தான் நன்றி நவிலும் பணியை மேற்கொள்வான். இங்ங்ணம் மூன்றாண்டுகள் ஒரே ஆசிரியர்-ஒரே மாணாக்கர் அடங்கிய தமிழ்த் துறையில் கூட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வந்தன. திருவேங்கடவனே வேங்கடேசன் வடிவமாகிக் கூட்டங்களை நடத்துவிக்கின்றானோ என்று கூட நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. இத்தகைய பல திருவிளையாடல்களை அவன் நடத்தியனவாக வரலாறு, களும் உண்டல்லவா? குமிழி-163 7. மூன்று நூல்களின் வெளியீடு I5ssair திருப்பதி வந்ததும் ஏற்கெனவே காரைக்குடி யில் எழுதி அச்சுக்குச் கொடுக்கப்பட்டிருந்த (1) கல்வி உளவியல், (2) காதல் ஒவியங்கள் (3) கவிதையநுபவம் என்ற மூன்று நூல்கள் அச்சேறத் தொடங்கின. உடனே பல்கலைக் கழக விதிப்படி இந்த மூன்று நூல்களையும் வெளியிடுவதற்கு இசைவு கோரி பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பித்தேன். இசைவும் தரப்பெற்றது. அப்போது மானிடவியலில் (1) வரலாறு (2) பொருளியல் (3) மெய்ப்