பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று நூல்களின் வெளியீடு 55 பொருளியல் (4) உளவியல் என்ற துறைகளும் மொழி யியலில் (1) தெலுங்கு (2) வடமொழி (சமஸ்கிருதம்) (3) உருது, அறபு, பாரசீகம், (4) புலம் அமையாத தமிழ் என்ற துறைகளும், அறிவியலில் (1) இயற்பியல் (2) வேதி யியல், (3) கணிதம், (4) தாவர இயல் (5) விலங்கியல் (6) நிலஉட்கூற்றியல் என்ற துறைகளும்தான் இயங்கி வந்தன. எந்தத் துறையிலும் எழுத்துப் பழக்கம் உள்ளவர் களோ, எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களோ இருந்ததாகத் தெரியவில்லை. கல்லூரிகட்கும் பல்கலைக் கழகத்திற்கும் நடைமுறையில் வேறுபாடே தெரியாதவர் கள் பலர் சேர்ந்து விட்டனர். இந்தத் துறைகளிலெல்லாம் பிஎச்.டிக்குப் பதிவு செய்து கொள்ளும் உரிமை இருந்தது. அறிவியல் துறைகளில் ஒரு சிலரைத் தவிர, பெரும் பாலோர் பிஎச்.டி. பட்டம் பெறாதவர்களே. வரலாறு, பொருளியல் துறைகளில் துறைக்கு ஒருவராகப் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்கள் இருந்தனர். மெய்ப்.ெ 1ாருளியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் இருவர் பணி யாற்றினர். கணிதத் துறையிலும் தெலுங்குத் துறை யிலும் எவருமே இலர். உருதுத் துறையில் டாக்டர்’ பட்டம் பெற்றவர் ஒருவர் இருந்தார். ஆனால் பொருளியல் துறையில் ஒருவரும் (இவர் மலையாளி) கணித துறையில் ஒருவரும் (இவர் வங்காளி), உளவியல் துறையில் ஒருவரும் (இவர் தமிழர்) டாக்டர் பட்டங்கள் இல்லாமலேயே பேராசிரியர் பதவியிலிருந் தன்ர். வடமொழியில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்கள் இருவரும் துணைப் பேராசிரியர்களாகவே இருந்து வந்தனர். வணிகத் துறையில் ஒருவர் டாக்டர்" பட்டம் பெற்றவர். ஒருவர் இருந்தும் எல்லோருமே விரிவுரை யாளர்களாகவே பணியாற்றி வந்தார். இவர்களை யெல்லாம் துணைவேந்தர் எந்த அளவு கோலைக் கொண்டு மதிப்பிட்டார் என்பது அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம். அறிவியல் துறைகளில் ஒரு சிலரைத் தவிர