பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

む& நினைவுக் குமிழிகள்-4 விழாமல் இல்லை. ஆனால் எந்த விதமான மனமுறிவும் (Frustration) ஏற்படாமல் அமைதியாகப் பணியாற்றி வந். தேன். உறுதி பயப்ப கடைபோகா வேனும் இறுவரை காறும் முயல்ப-இறும் உயிர்க்கும் ஆயுள் மருந்தொழுக்கல் தீதுஅன்றால்: ஆவனவும் உண்டு சில.” அல்லனபோல என்ற குமரகுருபர அடிகளின் திருமொழியின் ஒளியில் என் பணி சென்றது: முயற்சியும் தடைபடாது சென்றது. 'இறக்கும் வரையிலும் முயற்சியுடையவனாயிருத்தல் வேண்டும்; உயிர் நீங்கும் என்று தெரிந்தும் ஆயுளை நீடிக்கச் செய்யும் மருந்தை ஊற்றுகின்றார்கள்; முடிவு பெறாதனபோல் தோன்றி முடிவு பெறும் காரியங்களும் உண்டு. இடைவிடாமல் முயன்றால் ஆகாதனவும் கை கூடலாம்' என்ற அடிகளின் வாக்கு எனக்கு ஊன்றுகோல் போல் இருந்தாலும், பலனை ஏழுமலையானுக்கு விட்டு வி ட்டேன். மூன்று நூல்கள் ஒரே சமயத்தில் அச்சானதால் சென்னையிலிருந்து ஒரு வாரத்தில் குறைந்தது நான்கு நாட்கள் பார்வைப் படிவங்கள் அஞ்சலில் வந்து கொண் டிருக்கும். வந்த அன்றே திருத்தி அஞ்சவில் சேர்த்து விடு வேன். சில நாட்களில் இந்தித் துறையில் பணியாற்றிய எல்லையா என்ற ஒடும் பிள்ளை (Office boy) முன்ன தாகவே அஞ்சலகத்தில் பெற்று என்னிடம் சேர்ப்பிப்ப துண்டு. இதனால் அன்றைய வேலையின் அளவு காலை யிலேயே அற்றுபடியாய் விடும். அறையிலிருந்து பார்வைச் படியைச் சரிபார்த்தல், உடனே அஞ்சலில் சேர்த்தல், அடிக்கடி நூலகத்திற்குச் சென்று நூல்களைப் புரட்டி எனக்குத் தேவையான தகவல்களைத் திரட்டுதல், அறிவியல் ஆசிரியர்களை அவர்களது ஒய்வு நேரத்தில் 2. நீதிநெறி விளக்கம்-49