பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று நூல்களின் வெளியீடு 59。 சந்தித்து ஐயங்களை அகற்றிக் கொள்ளுதல், புதிய வற்றைக் கற்றல்-இச் செயல்களில் தொடர்ந்து சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்ததைக் கண்டு என்னுடன் நெருங்கிப் பழகிய பல துறை ஆசிரியர்கள் மெச்சினர்; பாராட்டினர். சற்றுத் தொலைவிலிருந்து கொண்டு நோக்கியவர்கள் மூக்கின்மீது விரலை வைத்துக் கொண்டு வியந்தனர். சிலர் பொறாமைப் பட்டதையும் நான் கண்டேன். கல்வி உளவியல்" என்ற நூல் முதலில் நிறைவு பெற்றது. இதற்குப் பேராசிரியர் ஜி. ஆர். தாமோதரன் (முதல்வர், பூ. சா. கோ. தொழில் நுட்பக் கல்லூரி, கோவை) அவர்களிடமிருந்து அணிந்துரையும், பேராசிரியர் டாக்டர் டி, ஆர். புருடோத்தம் (முதல்வர், பல்கலைக் கழகக் கல்லூரி, திருப்பதி) அவர்களிடமிருந்து ஒர் ஆங்கில அறிமுகமும், காரைக்குடியில் என்னுடன் பணியாற்றிய பேராசிரியர் வை. நா. சுப்பிரமணியன் (உளவியல் பேராசிரியர், அழகப்பா ஆசிரியர் கல்லூரி) அவர்ளிகடமிருந்து ஒரு முன்னுரை'யும் (Foreword) பெற்று நூல் வெளி வந்தது (சனவரி, 1961). இஃது என்னுடைய எட்டாவது வெளியீடாகும். இதனை. அப்போது சென்னை மாநிலக் கல்வி நிதி அமைச்சராகப் பணியாற்றி வந்த திரு. சி. சுப்பிரமணியத்துக்கு, சென்னை மா நிலத்தில் செந்தமிழ் அன்னைத் திருமுடி புனைந்தரி யணையில் மன்னிவீற் றிருக்க மதிசெய்கல் லூரி மாணவர் பல்கலை களையும் பன்னுதீந் தமிழிற் பயின்றிட உழைக்கும் பண்பினன், நிதிகலை அமைச்சன் : இன்னுரை வல்லான்; சுப்பிர மணியற் கிவ்வுள நூல்உரி’ பதுவே. என்ற பாடலால் , அன்புப் படையல் செய்தேன். இதற்குக்காரணம் வேண்டுமல்லவா? அறிவாலும்