பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நினைவுக் குமிழிகள்-4 ஆற்றலாலும் மேற்கொண்டு செயலாற்றும் பணியாலும் சீலத்தாலும் என் உள்ளத்தைக் கவர்ந்தவர். பத்தாண்டு கட்குமேல் அமைச்சரவையின் அருமணியாகத் திகழ்ந் தவர். இவரது ஆட்சிக் காலத்தில்தான் தமிழன்னை சட்ட சபையில் அரியணை ஏறினாள். தமிழாராய்ச்சி வளர்ச்சி ஆ லாசனைக் குழுவி'னை நிறுவித் தமிழன்னைக்குப் புதுக்கோலம் புனைந்து புத்தணிகள் பூட்டி அரியணை ஏற்றுவிப்பதில் முனைந்து நிற்கும் இவரது ஆட்சிக் காலத்தில் தான் தமிழன்னை பல்கலைக் கழகக் கல்வியிலும் பா. மொழியாக அரியணை ஏறத் தகுதி பெற்று வருகின்றாள்'. இத்தகைய பேரறிஞர்பால் யான் கொண்டுள்ள பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் அறி குறியாக இவர்கட்கு இந்நூலை அன்புப் படையலாக்கி னேன்.

காதல் ஒவியங்கள்’ என்னும் நூல் அடுத்து நிறைவு பெற்றது. இது சங்க இலக்கியத் தொகுப்பாகிய எட்டுத் தொகை நூல்களில் அகநானூறு குறுந்தொகை, நற்றிணை, புறநானுர்து கலித்தொகை என்னும் ஐந்து தொகை நூல்களிலிருந்தும் எடுக்கப் பெற்ற இருபத்து நான்கு பாடல்களின் விளக்கம். புறநானூற்றின் பாடல் ஒன்று(பாடல்-320) காதலின் நுட்பத்தை விளக்கு தால் அதுவும் இந்த நூலில் இடம் பெறலாயிற்று. அற்புதமான விளக்கமாகவும் அமைந்துள்ளது. இளங் கவிஞர்களுள் தலையாய கவிஞரான திரு எஸ். கே இராமராசனின் (தமிழாசிரியா, கண்டர் உயர் நிலைப்பள்ளி வேலூர் (சேலம்) அணிந்துரை பெற்று கல்வித் தந்தை' எனக் கருதத்தக்க திரு. ப துரைக்கண்ணுமுதலியார் அவர்கட்கு (முதல்வர் அழகப்பா ஆசிரியர்க் கல்லூரிக் காரைக்குடி) ஆங்கிலக் கலையை முறையுறப் பயின்றோன்;

அருந்தமிழ் அமுதினைச் சுவைத்தோன்; ஒங்குநற் கலைகள் தருபயன் அறிந்தோன்; உயர்ந்தநற் குணம்பல பெற்றோன்,