பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தொள்ளாயிர விளக்கம்-முகிழ்த்தல் 65 களைச் சுவைத்த முறையிலேயே அவற்றிற்கு விளக்கம் எழுதிக் கொண்டே வந்தேன். 1962-இல் பாடல் விளக்கமும் முடிந்தது. துணைவேந்தரிடம் கைப்படியைக் கொண்டு சென்று பல்கலைக் கழக வெளியீடாக வெளியிடுமாறு வேண்டினேன். ஒரு நிபுணர் கருத்து பெற்றுதான் வெளியிடமுடியும் என்று சொன்னார். பல்கலைக் கழகம் கட்டட வேலைகள், அறிவியல் தள வாடங்கள் கொள்ளும் பணிகள் இவற்றிற்கு ஏராளமான செலவுகள் இருந்தமையால் பணத்திற்கும் தட்டுப்பாடும் இருந்தது. என் வேண்டுகோளினால் துணைவேந்தருக்கு இரண்டு பிரச்சினைகள் ஏற்பட்டன. ஒன்று, நிபுணர் கருத்தைப் பெற வழி காண்பது. இரண்டு, நூல் வெளியிட நிதி காண்பது. துணைவேந்தரோ சிக்கன க்காரர், சிந்தனை மிக்கவர் என்பது நாடறிந்த செய்தி. என் கைப்படியை அவரிடம் தந்து வெளியிடும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன். டாக்டர் மு. வரதராசன் பாடத்திட்டக்குழு, பல்கலைக் கழகப் பேரவைக் கூட்டங்களுக்கு ஆண்டிற்கு மூன்று முறை வந்து போவதுண்டு. ஒரு சமயம் அவர் ஏதோ ஒரு கூட்டத்திற்கு வந்திருந்தபொழுது துணைவேந்தருக்கு நான் தந்த கைப்படியை நினைவூட்டி டாக்டர் மு. வ. விடம் அதனைச் சேர்ப்பிக்கச் செய்தேன். அஞ்சல் செலவின்றி கைப்படி அவரிடம் சேர்ந்தது. அவரும் நான்கு திங்களில் வேறொரு கூட்டத்திற்கு வந்த பொழுது தம் கருத்துடன் கைப்படியை என்னிடம் தந்து பல்கலைக் கழகத்தில் சேர்ப்பிக்குமாறு பணித்தார். நான் துணை வேந்தரிடமும் அவர் செவ்வியறிந்து கைப்படியைச் சேர்ப்பித்துப் பதிப்பிக்க வகை செய்யுமாறு வேண்டினேன். இவ்வாறு ஒரு பிரச்சினை தீர்ந்தது, திருவேங்கடவன் கீழ்த்திசை ஆய்வுக் கழகக் கணக்கில் நிதி துரங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்து வெளியீட்டிற்குக் கட்டளை பிறப்பித்தார். இரண்டாண்டுகளாக சிவப்பு நாடாவின்’ 周一5