பக்கம்:நினைவுச்சரம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§§ நினைவுக்

சின்னு ஒருத்தி. அவ த்ரீ லைட் பியூட்டி (Three side Beauty) ஆகியிருந்தா எங்க பேச்சிலே. இதெல்லாம் வாழ்க்கைக்கு சுவை ஏற்றுகிற ரசமான சிறு இனிமைகள். இதுகள் எல்லாம் இல்லாமப் போனு, வாழ்க்கை வறட்சி அதிகமா வாட்டும்.”

ரசமான விஷயம்னதும் ஞாபகம் வருது, அண்ணுச்சி. நாங்க படிக்கையிலே, நெய்ப்போளியின்னு ஒருத்தருக்குப் பேரு வச்சிருந்தோம். நெய் ஊற்றி தயாரித்த போளிமீது அவருக்கு ரொம்ப ஆசை போலிருக்குன்னு நெனேக்கிறவங்க நெனேச்சிக்கிடுவாங்க. ஆளு உண்மை அது அல்ல. அவருக்கு, நெப்போலியன் போனபார்ட்தான் பெரிய ஹீரோ. அப்போ ஜிரிட்டிஷ்காரனுகளே அவருக்குப் பிடிக்காது. நம்ம நாட்டிலே சுதந்திரப் போராட்டம் வளர்ந்து கொண்டிருந்த கட்டம், சுதந்திரம் கொடுக்க மறுத்த பிரிட்டிஷ்காரனுகளே கதிகலங்க அடிக்கனும் ; சரித்திரத்திலே வாருனே நெப்போலியன்பிரிட்டிஷாரை திணற அடிச்சவன்-அவன்மாதிரி ஆசாமி இப்ப தலைகாட்டனும் ; நம்ம நாடு விடுதலே அடைய நமக்கு ஒரு நெப்போலியன் தேவைன்னு லெக்சர் அடிக்கிற மாதிரிப் பேசுவார். இம்மென்னும் முன்னே இருநூறும் முந்நூறும், அம்மென்ருல் ஆயிரமும் ஆகாதோன்னு ஒரு பாட்டிலே வாற மாதிரி அவரு மூச்சுக்கு முந்நூறு தடவை நெப்போலியன்நெப்போலியன்னு உச்சரிப்பாரு. ஒருசமயம் ஒருத்தர் கேட் டாரு-பாவம், ஹிஸ்டசி படித்திராதவர். நெப்போலியன் பற்றி அவர் என்னத்தைக் கண்டார்?-அதென்னய்யா இவரு சும்மா சும்மா நெய்ப்போளி நெய்ப்போளிங்கிருரே அது என்ன விஷயம்? நெய்ப்போளிங்கிறது ஒரு ஆளு. பேரான்னு கேட்டாரு. எல்லாருக்கும் ஒரே சிரிப்புன்னு, வையுங்க. அன்றுமுதல் நெப்போலிய பக்தருக்கு நெய்ப்போ சிங்கிற பேரு வாய்த்துப்போச்சு என்று பால்வண்ணம் சுவா ரஸ்யமாகக் கூறினர், -

சுகவாசி வாய்விட்டுச் சிரித்து இதை பெரிதும் ரசித்தார். அண்ணுச்சியும் போனப் போகுது என்று தயவுக்காகச் சிரிப்பது போல லேசாகச் சிரித்து வைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/108&oldid=589352" இலிருந்து மீள்விக்கப்பட்டது