பக்கம்:நினைவுச்சரம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* : * 1 #53

கிட்டதும் நியாயம் தான். அண்ணுச்சியா பிள்ளே அந்தக் காலத்திலே ஏன் ஊரை விட்டுப் போனுகளாம்? நாற்பது வருஷ காலம் ஏன் இந்த ஊருக்கே வராமல் இருந்தாராம்? அவரும் பன்னப் பன்னுயின்னு பழம் கதை எல்லாம் பேசுதாரே; இதைப்பத்தி மூச்சுக் காட்டுதார பாருமேன் : இதிலே ஏதோ குட்டு இருக்கத்தான் செய்யுது. மத்தவங் களுக்கு டவுட் வராமல் போகுமா?’ என்று அவரது எண்ணப் புரி கழன்று நீண்டது.

† O

சிவபுரம் சுமாரான ஒரு கிராமம்.

பொதுவாக, தமிழ்நாட்டுக் கிராமங்கள் பலவற்றையும்

போலவே, ஒரு காலத்தில் செயலாக இருந்து வரவா ,

கrணதசை அடைந்து கொண்டே போகிற ஒரு சிற்றுார் அது என்பதை அதன் தோற்றம் காட்டிக் கொண்டிருந்தது.

முன்னுள்ளோர்-அதாவது, மத்திய தரவர்க்கத்தை சேர்ந்த முப்பாட்டன்மார் எப்படியே சொத்து சேர்த்து வைத்திருந்தார்கள். நிலம், வீடு, தோப்பு, மாடு கன்று, வண்டி வாகனம் என்று கொண்டு, ஊரோடு பெருமையாக வாழ்ந்தார்கள்.

சிவபுரம் தெற்கு ஊர் என்பது பின்னமார் வசிக்கும் பகுதி. முன்பு அதுவே ஊரின் பெரும் பகுதியாக இருந்தது. அதில் ஆறே தெருக்கள். கீழத்தெரு, மெலத் தெரு, வடக்குத் தெரு, தெற்குத் தெரு, நடுத் தெரு, குறுக்குத் தெரு. -

ஒவ்வொரு தெருவிலும் இடவசதி பெற்ற பெரிய வீடுகள் தள்ளித் தள்ளி வசதியாகக் கட்டப் பெற்ற கட்டிடங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/115&oldid=589359" இலிருந்து மீள்விக்கப்பட்டது