பக்கம்:நினைவுச்சரம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ம் 117°

ஒவ்வொரு வயலாய் கைமாறியது. மகன்கள் வேலே தேடி வெளியூர் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வெளியூருக்குப் போனவர்கள் போன போன இடங்களிலேயே தங்குவதும் சகஜமாயிற்று.

முப்பாட்டன்மார் அபூர்வமாக எப்பவாவது திருநெல்வேலி போய் வந்தாலே அது பெரிய திக்விஜயமாகக் கருதப்பட்டது. பாட்டன்மார்கள் திருச்செந்துார், தென்காசி என்று போக நேரிட்ட போதிலும், வடக்கே மதுரை வரை போய் வந்த, வர்கள் ஒரு சிலரே இருந்தனர். மணியாச்சிக்கு வடக்கே எட்டிப் பார்த்திராதவர்களே சிவபுரத்தில் அதிகம் பேர் இருந்: தார்கள். பிறகு, மூன்ருவது தலைமுறையினர் அநேகர் திருச்சி, கோயம்புத்துார், சென்னே என்று போய் அங்கேயே தங்கி விட்டார்கள். அதன் பிறகு வந்த இளைஞர்கள் பம்பாய், கல்கத்தா என்று போவதும், உல்லாசச் சுற்றுலா என்று காஷ்மீர் போவதும் சகஜமாகி விட்டது. மேல் படிப் புக்காக சிவபுரம் இளைஞன் ஒருவன் அமெரிக்காவுக்கே போயிருக்கிருன் என்பது அவ்வூர் வரலாற்றின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்று ஆகும்.

ஆகவே, சிவபுரம் தவளேகளேயும், தவளேப் புத்தியையும் வளர்க்கும் கிணறு ஆகவே இருந்து விட்டது என்று சொல்ல

முடியாது.

ஆளுலும், ஊரோடு இருந்தவர்கள் விசால நோக்கும் பெரிய மனமும், நல்ல எண்ணமும் மனிதாபிமானமும் கொண்டு, தாங்கள் சந்தோஷமாக வாழ்வதுடன் மற்றவர். களும்-எல்லோரும்-இன்புற்று வாழவேண்டும் எனும் சுபாவத்தை போற்றி வளர்த்தார்கள் என்று சொல்வதற்கும் இல்லே.

பார்க்கப்போல்ை, ஒண்னுக்குள்ளே ஒண்னு என்கிற தன்மையில் எல்லோரும் சொக்காரங்க சொந்தக்காரர்கள்) தான் என்று, தாயாதிமுறை கூறிக் குலப்பெருமை பேசிக் கொள்ளும் உறவு வகையினர் தான் தெற்குப் பகுதிக்காரர்கள் பூராவும். என்ருலும், அடுத்தவன் நல்லா இருக்கச் சம்மதிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/117&oldid=589361" இலிருந்து மீள்விக்கப்பட்டது