பக்கம்:நினைவுச்சரம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 133.

மேம்பாலம் இரண்டு அடுக்கிலே கட்டுருங்க. ஆசியா விலேயே இதுதான் முதலாவதோ-ரெண்டாவதோன்னு சொல்லிக்கிடுருங்க ? என்ருர் பால்வண்ணர்,

உமக்குத் தெரியுமா ? வீராவரம் ஜங்ஷன்கிற பெயரை அடையிறதுக்கு முன்னலே திருநெல்வேலிப் பாலம்னுதான் பேரு பெற்றிருந்தது. ரயில் டிக்கட்லேகூட அதே பேருதான் அச்சிட்டிருந்தாங்க என்று பெரியபிள்ளே கூறினர்.

ஏனப்படி? இங்கே ஊரு எதுவும் இல்லாமலிருந்து, ஆத்துப்பாலத்தை அடையாளமா வச்சு அப்படிப் பெயரிட். டிருந்திருப்பாங்களோ?’ என்று பாவன்கு வின் ஆராய்ச்சி உணர்வு கேட்டது.

ஏனே தெரியலே. ரயில்வே ஸ்டேஷன்லே, தண்ட வாளத்தை கடக்க உதவுகிற மேம்பாலம் இருந்தது. அதுக்கு அப்போ மேலே கூரைகூடக் கிடையாது...

திருமங்கலம் ஸ்டேஷன்லே கூட சமீப காலம்வரை அப்படித்தான் இருந்தது.” -

ஆமா. அதேமாதிரித்தான். அந்நாட்களிலே அது மாதிரி தண்டவாளங்களே கிராஸ் பண்ற மேம்பாலம் அதிகம் இருந்ததில்லே. அந்தப் பாலத்தை அடையாளமாக வச்சுத் தான் திருநெல்வேலி பிரிட்ஜ்-திருநெல்வேலிப் பாலம்எனறு பெயாடப்பட்டிருக்கும் என்று மாட்டு டாக்டர் பிள்ளே சொன்னுரு. அதை ஒட்டி இந்த இடமெல்லாம் திருநெல் வேலிப் பாலம்னுதான் வழங்கப்பட்டது.”

ஒகோ, போலீஸ் ஸ்டேஷன்லே கூட திருநெல்வேலி பாலம் போலீஸ் ஸ்டேஷன்னு போர்டு உண்டு. இதுக்கு ஏன் பாலம் காவல் நிலையம்னு பேரு, பக்கத்திலே பாலம் ஒண்னும் இல்லையேன்னு நான் நினைக்கிறது உண்டு. இப்போதான் விஷயம் புரியுது” என்ருர் தம்பியாபிள்ளே.

இன்னொரு விஷயம்லா !” என்று அவரே தொடர்ந்தனர். பாரதி பாட்டிலே, கண்ணன் பாட்டில் ஒரு இடத்திலே, பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்துமென்ருன்னு வருது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/133&oldid=589377" இலிருந்து மீள்விக்கப்பட்டது