பக்கம்:நினைவுச்சரம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் {4}

ளேக்காரர்களும், டிஸ்ட்ரிக்ட் மெடிகல் ஆபீஸர் போன்ற உயர் அதிகாரிகளும், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கட்டப்பட் டிருந்த பங்களாக்களிலும் சிறு விடுகளிலும் குடியிருந்தார்கள். ரிட்டயர்ட் ஜட்ஜ், ஒய்வுபெற்ற உயர்மட்ட சர்க்கார் அதிகாரி, பண்ணையார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று மேட்டுக் குடியினர்’-ஹைகிரவுண்ட் காற்ருேட்டமுள்ள இடம் ; கடல் காற்று வந்து வீசுகிற இடம்; ஆரோக்கியத்துக்கு நல்லது என்று அங்கே பங்களா வாடகைக்கு எடுத்துத் தங்குவார்கள். சாரட்டு, குதிரை வண்டி அல்லது கார் வைத்திருந்தவர்கள் தான் அங்கே வசித்தார்கள். ஒய்வு பெற்ற உத்தியோகஸ்தர் களும், வாழ்க்கை வசதிபடைத்த கிழவர்களும் பொழுது போக்கவும் தேகப்பயிற்சியாகுமே என்றும் சாயங்கால வேலை களில் ஹைகிரவுண்டுப் பக்கம் வாக் போவார்கள். அவர் களுக்கென்று இண்டியன் கிளப்' ஒன்று இருந்தது. சீட்டாட் டமும் கேரம் விளையாட்டும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பாட்மின்ட்னும் உண்டு. இவர்கள் கிளப் இரவு எட்டு மணிக்குள் அடைக்கப்பட்டுவிடும். இங்கிலீஷ் கிளப்’ ஒன்றும் இருந்தது. அங்கு கூடுகிற வெள்ளேயர்கள் குடித் துக் கும்மாளியிட்டு இரவில் வெகுநேரம்வரை கலகலப்பாக இருப்பார்கள். சனி இரவுகளில் துரைசாணி-களும் வருவார் கள் ; துரைகளும் துரைசானிகளும் குடித்துவிட்டு, டான்ஸ் ஆடிக் களிப்பார்கள் என்று விஷயம் தெரிந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். *

பள்ளி மாணவர்கள் ஒருசிலர் சனி ஞாயிறு மாலைகளிலும், விடுமுறை நாட்களிலும் சிக்கிரமே ஹைகிரவுண்ட் போய் விளேயாடிப் பொழுது போக்கிவிட்டு, இருட்டுகிற சமயத்தில் திரும்பிவிடுவார்கள்.

வெறிச்சிட்டு விரிந்துகிடந்த அந்தச் செம்மண் பூமியில் அங்கும் இங்குமாக நின்ற ஒருசில கட்டிடங்கள் தவிர, ஒன் றிரண்டு ஆலமரங்களும், புல் இனங்களும் கற்ருழையும்தான் காணப்பட்டன. திருச்செந்தூர் கடலிலிருந்து வந்த காற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/141&oldid=589385" இலிருந்து மீள்விக்கப்பட்டது