பக்கம்:நினைவுச்சரம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல்சரம் 145

தனவுமான வீடுகள் அடுக்கு அடுக்காக, காற்ருேட்டமில்லாத சூழ்நிலை.

அவர்கள் இருவரும் சாவகாசமாக நடந்தார்கள். அப் போது மணி நாலு ஆகியிருக்கவில்லை. மெதுமெதுவாக நடந் தாலும் அஞ்சு-அஞ்சேகால் மணிக்கு தாமிரவர்ணி ஆற்றுக்குப் போய்விடலாம் என்ற தெம்பு அவர்களுக்கு இருந்தது.

தெருவின் பாதியில் வருகிறபோதே வடக்கே கீழ்புறத்து வீடு ஒன்றின் வாசல்படியில் நின்று ஒரு அம்மாள் இவர்கள் பக்கமே பார்ப்பது தெரிந்தது. வேறு ஒன்றிரண்டு பெண்கள் நின்று வேடிக்கையாய் தெருவை பார்த்துக்கொண்டிருந் தார்கள்.

இவர்கள் நெருங்க நெருங்க அந்த அம்மாள்-அவளுக்கு ஐம்பது வயதுக்கும் அதிகமாகவே இருக்கும்-இவ் இரண்டு பேரையுமே கூர்ந்து நோக்குவது புரிந்தது.

இருவரும் அவ் வீட்டை மிகவும் சமீபித்ததும் அவள் படிகளே விட்டுத் தெருவில் இறங்கி நின்று, அவர்கள் முகத் தையே கவனித்தாள். பிறகு ஐயா, நீங்க சிவபுரத்திலே இருந்தா வாறிக?’ என்று தயக்கத்தோடு கேட்டாள்.

- ஆமா என்ருர் பெரியபிள்ளே.

அவரை மேலும் நன்ருக நோக்கிய அவள், நீங்க வேப்ப மரத்து வீட்டு ஐயாதானே?’ என்ருள்.

ஆமா என்ருர் அவர், இவள் யார்னு தெரியலியே எனும் மனக்குழப்பத்தோடு,

. ஐயா வாங்க’ என்று கும்பிட்ட அவள், முகம் மலர்ச்சி புற, அதில் சிறிது வெட்கமும்கூட, ஐயா மதுரையிலே யிருந்து எப்ப வந்திக? ரொம்பகாலமா ஊர்பக்கமே வராம இருந்தீகளே ?? என்ருள். .

நான் வந்து இருபது நாளாச்சு என்ருர் மஞ. பென. நீ யாரு, என்னைபத்திய விவரம் உனக்கு எப்படித் தெரியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/145&oldid=589389" இலிருந்து மீள்விக்கப்பட்டது